பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/41

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

39 |  வெள்ளியங்காட்டான் 


                | 27.09.1950
               சந்தேகவுண்டம்பாளையம்

நம்பிக்கையோடு இன்னும் செய்து கொண்டிருப்போம்!

        அன்புக் குழந்தாய்,

இன்று உன் அன்னையிடமிருந்து கடிதம் வந்தது. வெயிட் மிகவும் கு ைற ந் து வி ட் ட து மனக்கலக்கமில்லாமலிருந்தால் சீக்கிரம் உடம்பு தேறிவரும். மனதை வீணாக குழப்பிக் கொள்கிறாள். உன் அன்னை ஒவ்வொரு நாளும் உன் கடிதத்தை எதிர்பார்க்கிறாள். நீ நாள்தோரும்கூட ஒரு கடிதம் எழுதலாமே! எந்த நிலையிலும் நம் கடமையை நாம் தவறக் கூடாது. நீ படித்த குழந்தை. உன்னிடமிருந்து உன் தாயார் அடிக்கடி கடிதம் எதிர்பார்க்கிறாள். உன் சேமத்தை அறிவதும் ஆனந்திப்பதும் அவளுடைய மனதுக்கு எவ்வளவோ ஆறுதலாக இருக்குமே!

         தெளிவான நடையில் புரியும் படியான எழுத்தில் அடிக்கடி எழுது. இனியாவது தவராதே. உன் அன்னை பதில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் நீ எழுது. இங்கு நானும் நளினியும் சுகம். நாம்