பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/45

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

43 |  வெள்ளியங்காட்டான் 


             | 08.07.1950
               காஞ்சீபுரம்
         
   உனக்குப்புத்தகம் போதுமா?
  அன்பார்ந்த குழந்தாய்,
           உன் லெட்டர் கிடைத்தது. மிகவும் சந்தோஷம். காஞ்சீபுரம் ஒரளவு நல்லவூர்தான். கோவில்கள் மிகவும் அதிகம். ஊரினுள் நிறைய தெப்பக் குளங்களும் இருக்கின்றன. சனங்கள் 99 சதவிகிதம் பக்திமான்கள். ஆனால் அந்த அளவு மூடப்பழக்க வழக்கங்களும் இருக்கின்றன. மனிதர்கள் ஆரோக்கியத்தோடு இல்லை. ஆனால் சற்றேறக் குறைய நல்ல சுபாவஸ்தர்கள். நீ ஏன் நேரில் வந்து பார்க்கக் கூடாது. கோவையிலிருந்து எட்டு ரூபாய்தான். அரக்கோணம் வந்து வண்டி மாற்றி ஏறவேண்டும். இதில் என்ன கஷ்டம்.
          புத்தக வேலை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் முடிந்துவிடும். அநேகமாய் 11ம் தேதி வாக்கில் நான் இங்கிருந்து புறப்பட்டு விடுவேன். உன் அன்னைக்கும் கடிதம் எழுதியிருந்தேன். பதில் வரவில்லை. நளினி சிங்காநல்லூரில்தான் இருக்கிறாள்.