பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/47

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

45 |  வெள்ளியங்காட்டான் 


                 | 29.07.1950
              சந்தேகவுண்டம்பாளையம்

இந்த உலகத்தில் எதுவும் லச்சியமில்லை !

என் அன்புக் குழந்தாய்,

     உன் தேதியிடாத கடிதம் கிடைத்தது. நேற்று முன்தினம் நான் எழுதிய கடிதம் உனக்குக் கிடைத்திருக்குமென நம்புகிறேன். உன் அன்னையின் விஷயத்தில் நீ எந்த விதத்திலும் தப்பு அபிப்பிராயத்திற்கே வருகிறாய். உன் மனது மிகவும் கலங்கிப் போயிருக்கிறது போலும். மண்ணுலகில் இறக்கப் பிறந்தவர்களாகிய நாம், இறப்பதற்கு ஏன் பயப்படவேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை. இறப்பதற்குப் பயப்படக் கூடிய ஒருவன் இந்த உலகத்தில் ஏன் வாழ வேண்டும்?
      நான் என்ன சொல்லுகிறேன் என்றால், இருக்கும் வரையும் நம்பிக்கையுடனும், பரி வுடனும் கடமையாற்றவேண்டும் என்பதுதான். இதில் நாம் தவறிவிடக்கூடாது. உன் அன்னைக்கு இப்படி எல்லாம் எழுதுவது, இதை சொல்லும்படி கேட்பது எல்லாம் தப்பர்த்தத்திற்கு இடமாகும். நாம் ஒரு