பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47 |  வெள்ளியங்காட்டான் 


25.11.1950

சந்தேகவுண்டம்பாளையம்


எதிர்காலம் நம் அனைவருக்கும் ஏமாற்றமளிக்காது

என் அன்புக் குழந்தை வசந்தாமணி,

உன் தேதியிடாத லெட்டர் கிடைத்தது. ஒரு நல்ல கவிதை எழுதுவதைக் காட்டிலும் உன் லெட்டருக்குத் தகுந்த பதில் எழுதுவது எனக்குச் சிரமந் தருகிறது. இங்குகூட மழை கிடையாது. ஆனால், தண்ணீர் ஏராளமாக இருக்கிறது. இந்த வருஷம் வேளாண்மையும் ரொம்பத் தேவலை.

தோட்டங்கள் குத்தகைக்குக் கொடுப்பதும், பிடிப்பதும் இந்தக் காலமல்ல. தற்போது அனைவரும் விளைவை உண்டாக்கி அதைக்கண்டுகளிக்கும் காலம். சித்திரைப் பட்டம் அறுவடைக்குப்பின் தான் ஏதாவது அப்படி யோசனையிருந்தால் முயன்று பார்க்கலாம். எனினும், எனக்குத் தெரிந்தவர்களிடம் இதைப்பற்றிச் சொல்லி விசாரிக்கச் செய்கிறேன்.

நான் இனி இங்கு கொஞ்ச காலம்தான் இருப்பேன். அதிகம் ஆனால்