பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/51

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

49 |  வெள்ளியங்காட்டான் 


30.07.1951 சுதந்தர வித்தியாலயம்

வீரமும் தெளிவும் உடையவளாயிரு

என் அன்புக் குழந்தைகளே,

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த ஆசிகள். நலம் நலத்திற்கு பதில். சென்ற வாரம் உங்களுக்கு எழுத மறந்து விட்டேன். நான் தினம் கொஞ்ச நேரம் நூற்கிறேன். இதுவரை 7 சிட்டங்கள் நூற்றிருக்கிறிேன். பஞ்சு கிட்டத்தட்ட ஆய்விட்டது. நான் வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு வர உத்தேசித்திருக்கிறேன். அதற்குள் ஆதிப் பண்டிகையும் வந்து விட்டுப் போய்விடும் பக்கத்து விட்டு அண்ணாவின் மூலம் 4 கட்டு பஞ்சு வாங்கி வைக்கவும் நான் பணம் கொடுத்துவிட்டு எடுத்து வந்து கொள்கிறேன். அப்படி வந்தாலும் உடனே திரும்ப வேண்டியிருக்கும். எனவே மறந்துவிடாதே. குழந்தாய்! அறியாமை என்பது ஒரு நோய். பேதமை ஒரு பலவீனம் என்பதை