பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/53

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

51 |  வெள்ளியங்காட்டான் 


                                               28.11.1957
                                            பி. என்‌. பாளையம்‌

அன்புச்‌ செல்வி,

நலம்‌, நலம்‌ விளைக! மனோகரன்‌ இன்று லெட்டர்‌ எழுதியிருந்தான்‌. நான்தான்‌ எழுதாமல்‌ விட்டேனோ? இருக்கலாம்‌. உன்‌ கடைசித்‌ தபால்‌ மழை பெய்த தகவல்‌ என்று நினைக்கிறேன்‌. பாபு என்ன செய்து கொண்டிருக்கிறான்‌? சிலேட்டு, பென்சில்‌ வாங்கிக்‌ கொடுத்தாயிற்றா? தோட்டத்தில்‌ கிணறு இன்னும்‌ மூதலாளிகள்‌ மனம்‌ போலத்தான்‌ இருக்கிறதா? அம்பர்‌ ரசாட்டையிடம்‌ சரியானபடி வேலை வாங்குகிறீர்களா? பருத்திப்பயிர்‌ எப்படியிருக்கிறது? என்பதையெல்லாம்‌ எழுது. உனக்கு இந்த மாதமும்‌ கொஞ்சம்‌ பணம்‌ அனுப்ப விரும்புகிறேன்‌. உடம்பை நல்லபடியாக வைத்துக்‌ கொள்வதில்‌ அசிரர்த்தை இருக்கக்கூடாது. டாக்டரம்மா அவர்களின்‌ யோசனைகளை ஏற்று அதன்படி. நடந்துகொள்வாய்‌ என்று நம்புகிறேன்‌. உங்கள்‌ ஊரில்‌ கடைசியாக ஒரு பலத்தமழை பெய்ததென்றால்‌ அது டாக்டரம்மாவின்‌ பொருட்டாகத்தான்‌ இருக்கும்‌.