பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/55

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

53 |  வெள்ளியங்காட்டான் 

                                                         |27.10.1960
                                                          புளியம்பட்டி

காலம் நிற்பதில்லை!

அன்புச் செல்வன் மனோகரன்,
       24.10.1960 தேதியிட்ட உன் கடிதம் கிடைத்தது. அனைவரின் நலத்தையும் அறிந்து மகிழ்கிறேன். இங்கு யாவரும் நலம். பாபுவின் படிப்பு நல்ல முறையில் தொடங்கப்பட்டுவிட்டது. வனிதா, சின்னக்குழந்தை - இவர்களுடன் என் பொழுது நல்ல விதமாக கழிந்து கொண்டிருக்கிறது. இன்னும் அத்தானுக்கு வேலை கிடைக்கவில்லை.
       நான் இங்கு இருப்பதில் அக்காவுக்குச் சற்று உதவியாக இருக்கிறதாம். சின்னக் குழந்தை அழுதால் தொட்டிலை ஆட்டுவது; வனிதா முரண்டு பிடித்தால் கொஞ்சம் மிரட்டி வேடிக்கை செய்வது; பாபுவுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுப்பது என்ற இவைகள் என் தினசரி அலுவல்கள். ஒழிந்த நேரம் படிப்பது இன்னும் நான் எதுவும் எழுதத் தொடங்கவில்லை. அதற்கான காலம் இன்னும் வரவில்லை. ஆயினும் அது சீக்கிரம் வந்து தீரும் இது நிற்க.