பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/56

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

54 |  ஒரு கவிஞனின் இதயம்

 நீ நன்னூலை மறுபடியும் ஆராய்ந்து அறிந்து கொள்வாய் என நான் நம்புகிறேன். இருதயம் ஒரு இலக்கணப் புத்தகமாக இருக்க வேண்டுமென்பதே என் ஆசை. மொழியைப் பற்றிய அனைத்து விபரமும் முன்கூட்டி அறிந்து கொண்டால் பின்பு அது உனக்குப் பேருதவியாக இருக்கும். தேக்கமில்லாமல் குறிக்கோளை நோக்கி முன்னேறிக் கொண்டே இருப்பதுதான் சரியான இன்பத்தின் அடிப்படை கீதை சொல்வதும் அதுவே. முயற்சியின் வலிமை சொற்களில் அடங்குவதன்று. ஒரு செடியின் நூலளவு போன்ற வேர் பெரும் பாறைகளையும் ஊடுருவ வல்லது என்பதை எண்ணிப்பார். இடைவிடாத முயற்சிக்கு நிலையான வாழ்வுக்குச் சரியான உபமானம் ஒரு சிறு செடிதான்.

          காலம் நிற்பதில்லை
          இளமை நிற்பதில்லை. இன்ப துன்பங்களும் நிலைபேறுடையனவல்ல. என் அன்புக்குழந்தையே நம்முடைய சாதனைதான் உலகில் நிலைத்திருப்பது. இந்தச் சாதனைக்காகவே நாம் அனைவரும் சதா இயங்குவோமாக! மற்றவை உன் பதிலுக்குப் பின். அனைவருக்கும் என் அன்பும் ஆசியும்.
உன் அப்பா,


வெள்ளியங்காட்டான்.








பி.கு: அண்ணாவின் திருமணமும் என் திருமணமும் முடிந்தபின் என் சகோதரியிடம் சென்று இருந்தபோது