பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/60

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

58 |  ஒரு கவிஞனின் இதயம்

வந்திருப்பவன் அவனேயன்றோ? நட்சத்திரங்கள் அடர்ந்த வான பீடத்திலே அமர்ந்து எங்களைத் திக்கற்ற வேட்டை விலங்குகளைப் போல் மிதித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவனும் அவனேயன்றோ? கவிஞனே நீ மீண்டும் உண்மையில் பிறப்பாயானால் செளக்கியமாய்க் கவலையற்று வாழும் செல்வரின் கவிஞனாய் இல்லாமல் ஒரு தொழிலாளியின் சமையலறையிலுள்ள மண்பானையாய்ப் பிறந்தாலும் போதும்,அது அவனுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் சிறிதேனும் உதவியாயிருக்கும். ஆனால், இதையெல்லாம் விட நீயும் ஒரு தொழிலாளியாகவே பிறந்து கோடிக்கணக்கான நம் சகோதரரை யெல்லாம் கனல்வீசும் கொடியின் கீழே - இப்போதே பல சாம்ராச்சியங்களை நிலைகலங்கச் செய்துள்ள அந்தக் கொடியின் கீழ் - திரளச் செய்வதே மேலாகும்.

      என் செல்வமே! இதை நீ சிந்தனை செய்துபார். இதிலிருந்து நான் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பது நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்.
      மனோகரனுடைய கல்யாணத்துடன் என் குடும்பப்பழு தீர்ந்து விட்டதாக நினைக்கிறேன்; என் பொறுப்புகளை இறக்கி வைத்து விட்டதாகவே எண்ணுகிறேன். உன் சகோதரன் எப்போதும் உன் அருகில் இருக்கிறான். எந்தச் சமயத்திலும் உன் நலன்களுக்கு அவன் சரியான பாதுகாவலன். அக்காளுக்குக் கிடைக்காத இந்தச் சகோதர வாய்ப்பு உனக்குக் கிடைத்திருக்கிறது. இது ஒரு பெரும்பாக்யம் என்பதை நீ புரிந்து கொண்டால் உன் அச்சமும் கவலையும் அகன்று விடுமே.
      நான் இங்கு நிறையப் படிக்கிறேன். பகலும் இரவும் தன் பாட்டுக்கு வந்து வந்து சென்று கொண்டிருக்கின்றன. நாட்கள் சீக்கிரம் சீக்கிரம் மறைந்து போகின்றன. ஆனால் என் காரியம் இன்னும் தொடங்கப் படாமலேயே இருக்கிறது; எனினும் விரைவில் அது ஆரம்பமாகிவிடும்.
      மனோகரனுக்கு என்னைப் பார்க்க வேண்டும்