பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/62

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

60 |  ஒரு கவிஞனின் இதயம்


14.03.1961

புளியம்பட்டி

இன்று அந்த உறுதுணை இல்லை ஊன்றுகோல் இல்லை

அன்புச் செல்வி நளினி,

      உன் கடிதம் கிடைத்தது; மகிழ்ச்சி! நலம், நலம் விளைக!
      உனக்கு இந்தக் கடிதம் எழுதும் வேளையில் தினமணிச் சுடர் இதழ் ஒன்று என் முன் கிடந்திருந்தது. அதன் தலைப்பில் ராபர்ட் பிரெனிங்கின் ஒரு பொன்மொழி “முன்னேற்றமே வாழ்வின் நியதி, எழுவதற்கே வீழ்ச்சி; வெல்வதற்கே தோல்வி; விழிப்பதற்கே தூக்கம்” என்பது.
      சிறிது வெட்கத்துடன் இந்த இரவல் வாக்கியத்தைத்தான் உனக்கு இன்று என்னால் தர முடிகிறது. எனக்குச் சொந்தமானது என்று எதுவுமே என்னிடம் இருக்கவில்லை. இது உனக்குப் பயன்பட்டால், எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். என்னைத் தவிர, மற்ற அனைவருக்கும் இது மிகவும் உபயோகமான ஒரு வாக்கியம் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்.