பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/65

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

63 |  வெள்ளியங்காட்டான் 

வளர்ப்பு என்ற புத்தகம் வாங்கிப் படித்துப் பார்க்கும்படி எழுதியிருந்ததாக அறிகிறேன். அதை வாங்கி விட்டாயா? அது மிகவும் நல்ல புத்தகம். தாயாகிய அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் அதிலிருப்பதை நானும் படித்தேன். அது உன்னிடத்தில் ஒன்று இருந்தால் நல்லது. இதுகாறும் வாங்காதிருந்தால் சீக்கிரம் ஒன்று வாங்கி வைத்துக் கொள். நேரம் கிடைக்கும்போது படித்து அறிந்துகொள்.

சரோஜினியின் சந்தோசத்தைக் குழந்தை மிகுவிக்கின்றான். குழந்தையால் சரோஜினிக்கும் பொழுது நன்கு கழிகிறது என்பதை அறிய ஆறுதலாக இருக்கிறது.

எப்படியாவது நீங்கள் அனைவரும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறீர்கள் என்ற நினைவே எனக்குப் போதுமானது.

இனி வேறு என்ன எழுதுவது? என் உள்ளம் வெறுமையான நிலையில் இதுவே அதிகம். இனிமேல் என் கைப்படவே எழுத வேண்டுமென்று நீயும் எதிர்பார்க்காதே. அப்படி நீ எதிர்பார்த்தால் அது எனக்கு மேலும் துயர் விளைவிப்பதாகவே இருக்கும்.

இங்ஙனம்

உன் அப்பா,

வெள்ளியங்காட்டான்.