பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/68

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

66 |  ஒரு கவிஞனின் இதயம்

| 01.04.1961

இரத்தினபுரி காலனி

நாசக்கே ஒகுவ பாகி தொட்டது தாரி அகலவு

அன்புச் செல்வன்,

என் காலம் வெறும் கையோடு உட்கார்ந்து கொண்டு வீணாக கழிப்பது மன்றி உனக்கும் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறேனே என்பதுதான் என் கவலையெல்லாம்.

நளினி மாடு விற்ற பணத்தை பற்றிக் கூறியிருந்தாய். நளினியும் எனக்குப் பணம் அனுப்புவதாக எழுதியிருந்தாள். அதனால் இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. நளினியால் எவ்வளவு முடியுமோ அவ்வளவை அனுப்புமாறு எழுதி விடுகிறேன். ஆனால் ஒரு பெண் குழந்தைக்கு ஒரு தந்தை கொடுத்து உதவுவதே அன்றி வாங்கிக் கொள்வதல்ல. இது நடைமுறைக்கு முரனானது நான் நளினியிடம் பணம் கேட்டு வாங்குவது. ஆயினும் வேறு வழியில்லை. பின்னால் வேண்டுமானால் நாம் அதைத் திருப்பிவிடலாம்.