பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/69

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

67 |  வெள்ளியங்காட்டான் 

ஒரு கவிஞனுடைய குழந்தைகள் நீங்கள் மூவரும். உங்கள் மூவர் பேரிலும் ஒரு இம்மி அளவு மாசும் மறுவும் ஒட்ட இடம் தரவேண்டாம் தவறு செய்பவர் பிறராக இருக்கட்டும். நீங்கள் நல்லதையே நினையுங்கள் நல்லதையே செய்யுங்கள்.

நான் இங்கு கன்னடத்தில் வழங்கும் ஒரு வாக்கியத்தை உனக்குக் கூற விரும்புகிறேன்.

“இக்கட்டாத பாகிலிந்த ஒளகே ஒகிரி, நாசக்கே ஒகுவ பாகி தொட்டது, தாரி அகலவு; அதரல்ல ஒகுவவரு பகுஜன. நித்ய ஜீவக்கே ஒகுவ பாகிலு இக்கட்டு தாரி பிக்கட்டு; அதன்னு கண்டு இடியுவவரு ஸ்வல்பஜன”

இதன் தமிழ் அர்த்தம் இது: “இடுக்கான கதவு வழியாக உள்ளே செல்லுங்கள். நாசத்திற்கு கொண்டு செல்லும் கதவு பெரியது. வழியும் அகலமானது. அதில் செல்பவர் பலர். அமரத்வத்திற்குச் செல்லும் கதவோ சிறியது, வழியும் மிகச் சிரமமானது. அதைக் கண்டுபிடிப்பவர் வெகு சிலரே”.

பொருள் மட்டும் தேடிக் காப்பாற்ற வேண்டியது என்று பலரும் நினைக்கலாம். ஆனால் நீ அத்துடன் பொறுமை, கருணை, அன்பு, மனச்சாந்தி முதலியனவும் கைவிடாமல் காப்பாற்றப்பட வேண்டியவை என்று நம்பி இரு!

உன் அப்பா,

வெள்ளியங்காட்டான்.




பி.கு: எ ன் புகுந்த வீட்டில், எனக் கான சடங்குகள் தேவையற்றது. முட்டாள்தனமானது என்ற பிரச்சனையைத் தொடர்ந்து கர்நாடகத்திற்கு சென்றபோது