பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/70

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

68 |  ஒரு கவிஞனின் இதயம்

| 18.05.1961

இரத்தினபுரி

வாழ்வுக்குச் சரியான உவமானம் ஒரு செடி |

அன்புச் செல்வன்,

நலம்; நலம் விளைக; உன்னுடைய 15.5.61 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. தன்னந் தனிமையில் நூற்றுக்கணக்கான மைல் தூரத்தில் இருக்கும் என் போன்ற ஒருவருக்கு உயிராக இருப்பது தம் குடும்ப நலன்களைத் தாங்கிவரும் கடிதங்கள்தாம். கடிதம் கிடைப்பதில் தாமதமாயினும் நானும் சரி - நீங்கள் மூவரும் சரி - எழுதுவதில் மட்டும் தாமதம் இருக்கக் கூடாது. உன் அக்காளிடமிருந்தும், உன் தங்கையிடமிருந்தும் ஒவ்வொரு நாளும் கடிதத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து விடுகிறேன். வாரம் ஒரு கடிதம் எழுத இவர்களால் முடியாத ஒன்றா? இது நிற்க.

என் மதிப்பில் நீ என்றும் என் செல்வ மகன்தான். எந்த நிலையிலும் உன்னைப் பற்றித் தவறாக எடை போட மாட்டேன். அதற்கு அவசியமேயில்லை.