பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/72

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

70 |  ஒரு கவிஞனின் இதயம்

காலம் நிற்பதில்லை

இளமை நிற்பதில்லை

இன்பதுன்பங்களும் நிலைபேறுடையனவல்ல.

என் அன்புக் குழந்தையே,

நம்முடைய சாதனையே உலகத்தில் நிலைத்திருப்பது. இந்தச் சாதனைக்காக நாம் சதா இயங்குவோமாக. மற்றவை உன் பதிலுக்குப்பின். அனைவருக்கும் என் ஆசியும் அன்பும்.

உன் அப்பா,

வெள்ளியங்காட்டான்.







பி.கு: கர்நாடகாவிலிருக்கும் அந்த நண்பர் தந்தைக்கு எப்படி அறிமுகம் என்பது இன்று வரை தெரியாது. அவர் தம் நிலத்தில் சிறுபகுதியை இவருக்காக ஒதுக்கித் தந்திருந்தார். அதில் இவர் உழைத்து காய்கறிகளைப் பயிரிட்டுக் கொண்டும், கோழிகளை வளர்த்துக் கொண்டும் இருந்தார். சிறுவயதில் சிறந்த விவசாயியாக இருந்ததால் அது அவருக்கு மிக விருப்பத்தோடு செய்யும் வேலையாயிற்று.