பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/73

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

71 |  வெள்ளியங்காட்டான் 


                                               22.05.1961
                                        இரத்தினபுரி காலனி  

ஆற்றல் எதற்காக இருக்கிறது?


என் அன்பு மகனே,

உன்னுடைய_17.5.67 தேதியிட்ட கடிதமும் கிடைத்தது. அக்காளுடைய லெட்டரும் கிடைத்தது. அக்காளுக்கும் இன்று கடிதம் எழுதுகிறேன்.

உள் அன்பினால் பிணைக்கப்பட்டுள்ள ஒரு கணவனும் மனைவியுமாகிய உங்கள் வாழ்வில் என்றென்றும் பெருமகிழ்ச்சி நிறைந்து பெருகும். என் வரையில் இதற்கு ஐயமேயில்லை. என்னுடைய ஆசி நான் உனக்கு அந்நியனாகும் போதுதான் பலிதமாகும். இன்று நான் வேறு நீ வேறு அன்று. எனக்கு நானே ஆசி கூறிக் கொள்ள இயலுமானால் உனக்கும் கூற முடியும் அது அவ்வளவு முக்கியமும் அல்ல. ஆசியைக் காட்டிலும் நானே உனக்காக இருக்கிறேன்: உனக்காகச் செயல்படுகிறேன் ; உனக்க வாழ்கிறேன். இதுபோலவே நீயும் எனக்கும் எல்லாமுமாக இருக்கிறாய். நம் வாழ்வில் இன்பம் பெருக. மகிழ்ச்சி பொங்கி