பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/76

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

74 |  ஒரு கவிஞனின் இதயம்

74

ஒரு கவிஞனின் இதயம்

| 22.10.1961

இரத்தினபுரி காலனி


நோய்நொடிகள் குழைந்தைகளைத் தாக்க விடாதே!


அன்புச் செல்வி,

‘வாழ்க்கை' என்ற சொல்லுக்குப் பலபொருள்கள் உண்டு. தத்தம் குழந்தைகளுக்காக உழைப்பது, கவலைப்படுவது - இதுதான் வாழ்க்கை எனினும் மறுப்பதற்கில்லை. தாயும் தந்தையும் தம் குழந்தைகளுக்காக மட்டுமே உழைக்கிறார்கள், கவலைப்படுகிறார்கள். ஆனால், ஒரு தாத்தா தன் குழந்தைகளின் குழந்தைகளுக்காகவும் உழை க்கவும் கவலைப்படவும் வேண்டியிருக்கிறது.

தற்சமயம் மனோகரன் இங்கு வருவதை நான் தடுத்துவிட்டேன். அடுத்த ஜனவரியில் தான் அவன் வரக்கூடும்.

சின்னப்பாப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்ற உன் செய்தியினால் என் மனத்திற்கு வருத்தம் ஏற்பட்டது. இப்போது பரவாயில்லை என்ற வார்த்தை உடனே