பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/77

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

75 |  வெள்ளியங்காட்டான் 


ஆறுதல் அளித்தது. இது போலவே அங்கு மழை பெய்திருக்கிறது என்ற வார்த்தையும் எனக்கு மகிழ்ச்சியளித்தது.

என்னுடைய விவசாயம் இதுதான். இங்குள்ள மக்களின் மனதைப் பண்படுத்தி நல்ல கருத்துக்கள் என்னும் விதைகளை நட்டிருக்கிறேன். கொள்கை, கோட்பாடு என்ற செடிகளையும் பயிர் செய்திருக்கிறேன். இவ்வாறு நான் வைத்த பயிர் பச்சைகள் நம்பிக்கை என்ற கிளையோடு நன்கு வளர்ந்து வருகின்றன.

பாபு தைமாதம் எப்போது வரும்? என்று கேட்கவே இதை அவனுக்கு உன்னால் விளக்கிச் சொல்ல முடியவில்லை என்கிறாய். இந்தச் சிரமத்தை உன் அப்பாவாகிய என்மேல் சுமத்திவிட்டாய். பாபு படிப்பில் கெட்டிக்காரன் என்று பெயர் வாங்கிவிட்ட அன்றே தைமாதம் வந்துவிடும் என்று நீ அவனிடம் சொல். அப்போதுதான் தாத்தா வருவார் என்றும் சொல்லிவை.

இறுதியில் உனக்கு ஒன்று சொல்லிக் கொள்ள அனுமதிப்பாய் என்று நம்புகிறேன்.

குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலமில்லை யென்பதிலிருந்து எனக்கு இதைச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.

நீ இன்னும் புனிதமான அன்னை என்னும் பாத்திரத்தை விளக்கிக்கொண்டு வகிக்கவில்லை. இனியாயினும் புரிந்துகொள். நோய்நொடிகள் குழந்தைகளைத் தாக்கவிடாதே. எச்சரிக்கையுடன் நட.

மற்றபடி நலம்,
உன் அப்பா

வெள்ளியங்காட்டான்.