பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/80

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

78 |  ஒரு கவிஞனின் இதயம்

7 8

ஒரு கவிஞனின் இதயம்

26.10.1961

இரத்தினபுரி காலனி

எல்லாவற்றைக் காட்டிலும் பெரிய தவறு!

அன்புச் செல்வி,

"நான் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் தான் இருக்கிறேன்" என்ற உன் கடிதத்தில் கண்ட வார்த்தையே எனக்கு ஆரோக்யமும் நிம்மதியும் அளித்தது.
     தீபாவளி போனஸ் விவரம் நான் தினமணியில் படித்தறிந்தேன்.பத்திரிக்கைகள் மூலமாக நான் தமிழ் நாட்டைப் பார்க்கிறேன். இத்துடன் கன்னட நாட்டையும் பார்க்கிறேன்.இன்று நான் படித்த கன்னடப் பத்திரிக்கையில் ஒரு வாக்கியம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது கார்லைல் என்ற மேல் நாட்டு அறிஞருடையது. 
    இந்த ஆண்டு தீபாவளிக்கு நான் உனக்குத் தரும் பரிசு இதுதான்.
   "எல்லாவற்றைக் காட்டிலும் பெரிய தவறு, நம் தவறுகளை நாம் அறிந்து கொள்ளாமலிருப்பதே" இந்த வார்த்தையின்