பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/84

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

82 |  ஒரு கவிஞனின் இதயம்


9. உலகம் ஒரு புல் கட்டு. மனிதர்கள் அதை அப்படியும், இப்படியும் இழுத்தாடும் கழுதைகள்.

10. தேன் இனிப்பானதுதான் அமிர்தம் அதைவிட இனிப்பானது எல்லாவற்றைக் காட்டிலும் இனிப்பானது கவிதை.

இவைகள் போதுமென்று நினைக்கிறேன். இந்தக் கடிதம் உன் கைக்குக் கிடைக்குமுன் நீ பணம் அனுப்பியிருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி உடனே அனுப்ப முயற்சி செய். இந்தக் கடைசி முப்பது ரூபாய்கள்தான் என் விதைத் தானியம்.

தற்போது 13 கோழிகள் இருக்கின்றன. அரை ஏக்கரா பூமியில் கரு பூசணிக்காய் செடி போட்டு முளைத்திருக்கிறது. சாளை வேலை முடிந்தும் முடியாமலும் இருக்கிறது. இதற்கு நண்பர்கள் உதவி மிகவும் உண்டு. 8-0-0 ரூபாய்க்கு ஒரு பெட்டியும் வாங்கியிருக்கிறேன். கன்னட மொழி காலப்போக்கிற்கு ஒத்தாசையாக இருக்கிறது. பிரஜாவாணி, தினமணி பத்திரிக்கைகளும் வருகின்றன. கோழிப் பண்ணையை விசாலப் படுத்த கிராம சேவக் உதவியுடன் நடத்த திட்டமிட்டிருக்கிறேன். அரசாங்க உதவியும் கூடிய சீக்கிரம் கிடைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்.

இவையெல்லாம் எனது நெடுநாளைய கனவுகள். இன்று நனவாகிக் கொண்டு வருகிறது. மற்றபடி எல்லோருடைய நலத்துக்கும்.

உடனே பதில்,

                                                       உன் அப்பா
                                             வெள்ளியங்காட்டான்.