பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/89

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

87 |  வெள்ளியங்காட்டான் 


                                        87 | வெள்ளியங்காட்டான் 

தள்ளி, கொள்ளுவதைக் கொள்ள வேண்டும். இந்த அம்சம் நளினியிடம் மிகவும் குறைவு.

      அக்காளிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. இந்த ஆண்டு விவசாயம் அக்காளுக்கு ஏமாற்றம் தரவில்லை. நளினியின் துன்பங்களும் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பது உன் கடிதம் மூலம் தெரிகிறது. உன்னைப் பற்றி நினைக்கும்போது மகிழ்ச்சி உண்டாகிறது. நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பதும் இதுதானே.
      இங்கு ஒன்று கூற விரும்புகிறேன். தாழ்வின் எல்லை நமக்கு மிகவும் அருகில் இருக்கிறது. ஆனால் உயர்வின் எல்லை நமக்குத் தூரமாகவே இருக்கிறது. இந்த எல்லையை நாம் சென்று சேர இடைவிடாத முயற்சியும் எச்சரிக்கையும் அவசியம். நீ இன்னும் நிறையப்படிக்க வேண்டும். தொல்காப்பியத்தை ஐயமற ஆராயவேண்டும்.  கௌரவம், கீர்த்தி உண்பதில் உடுப்பதில் மட்டும் கிட்டுவதில்லை. அயராத உழைப்பில் அது பாலில் வெண்ணை போல் கலந்திருக்கிறது. மற்றபடி உன் கடிதம் பார்த்து
                                    உன் அப்பா                                                  வெள்ளியங்காட்டான்.