பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/90

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

88 |  ஒரு கவிஞனின் இதயம்

15.06.1962 இரத்தினபுரி காலனி இந்த ஒரு குறையைத் தவிர... | அன்புச் செல்வன்

     உன் கார்டு கிடைத்தது. கருத்தில்லாமல் எழுதிச் சுரத்தில்லாமல்  தபாலில் சேர்க்கப்பட்டதுபோல் அது தென்பட்டது. எது எப்படியாயினும் சரி, அநேகமாக நான் ஒரு பழுத்த இலை. என்னால் இனி யாருக்கும் பயினில்லை. என் இதயத்தில் எந்தவிதமான பற்றுக்களும் இல்லை. ஒரு துறவி போலச் சிறுக என் மீதி
நாட்களை இங்கேயே கழித்துவிடுவதே உசிதமாகப் படுகிறது. அதற்ககேற்பவே சூழ்நிலையும் அமைந்துவருகிறது. எனினும் மனதின் ஒரு இடத்தில் என் கண்ணால் காணாத் பேத்தி, சின்னப் பேரன்களின் நினைவுக் குறை இருந்தே இருக்கிறது. இந்த ஒரு குறையைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை. எப்படிப் பார்த்தாலும் இது நீங்க முடியாததாகவே தெரிகிறது. மற்றபடி வேறு செய்தி இல்லை
                                     உன் அப்பா 
                           வெள்ளியங்காட்டான்