பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/91

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

89 |  வெள்ளியங்காட்டான் 

| 05.07.1962

இரத்தினபுரி காலனி

எப்படியோ சாப்பாடு கிடைக்கிறது |

அன்புச் செல்வன்,

தேதியிடப்படாத உன் கடிதம் கிடைத்தது. கடித வாயிலாய் நான் உன் இதயத்தைக் காண்கிறேன். வீரம் என்ற மின் விளக்கொளி உன்னில் இல்லை. இது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. மனிதத் தன்மையை வெற்றுச் சொற்களைக் கொண்டு மட்டும் நிர்ணயித்துக் கொள்ளும் பழக்கம் என்னிடம் இல்லை. செயல் மூலமே அதை நான் நம்பும் பழக்கம் நீண்ட காலமாக இருக்கிறது. நீ என்னைப் புரிந்து கொள்ளாதவனாகவோ இல்லை புரிந்து கொண்டும் என் வழியில் நடக்க அசக்தனாகவோ இருக்கிறாய் என்பதை நான் அறிகிறேன்.

எனவேதான் உன்னை என் பந்தத்திலிருந்து என் அதிகாரத்திலிருந்து நீக்கி சுயேச்சை அளித்தேன். உன் வாழ்க்கை உன் எதிர்காலம் உன் பொறுப்பில் உள்ளது. அதை நீ எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள். என் கோழிப் பண்னண