பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/93

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

91 |  வெள்ளியங்காட்டான் 

07.08.1962

இரத்தினபுரி காலனி

நளவெண்பாவின் கருத்து நிதர்சனமாகிறது!

அன்புச் செல்வி

27.7.62 தேதியிட்ட உன் கார்டு கிடைத்தது. என் மனம், சொல்ல வேண்டிய ஒன்றைச் சொல்லாவிடினும் புண்படும். சொல்லக்கூடாத ஒன்றைச் சொல்லினும் புண்படும். எனினும் இனி புண்படுவதென்பதில்லை. ஏனெனில் எத்தனையோ புண்கள் பட்டு ஆறித் தழும்பாகிவிட்டது.

நான் உங்களை விட்டுப் பிரிந்து வந்ததும் நீங்கள் என்னை விட்டுப் பிரிந்திருப்பதும் வருத்தப்படவேண்டிய விஷயமல்ல. ஏனெனில் என்றாவது ஒருநாள் இப்படிப் பிரிந்து தீரவேண்டியது இயல்பு. நாளை நிகழ்வது நேற்று நிகழ்ந்து விட்டது. அவ்வளவுதான். காலக்கிரமத்தில் நிரந்தரமாகப் பிரிவதற்கு இது ஒரு ஒத்திகை.

அக்கா இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு கடிதத்தில் பா.நா. பாளையம் வருவதாக எழுதியிருந்தாள். அதற்குப் பின் கடிதமில்லை. அக்கா வந்து விட்டுச்