பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/95

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

93 |  வெள்ளியங்காட்டான் 

13.08.1962

இரத்தினபுரி

ஐயங்கள் கூடவே எழுகின்றன .

அன்புச் செல்வி,

உன் கடிதம் கிடைத்தது. இரண்டு நாள் சிந்தித்தேன். தைமாதம், சித்திரை மாதம், ஆடி மாதம் என்று நான் இது வரையும் சொல்லி வந்த எல்லா மாதங்களும் வந்து சென்றுவிட்டன. திரும்பும் என் பிரயாணம் இன்னும் நிறைவேறவில்லை. என் வார்த்தைகளும் பொய்துவிட்டன. இப்படி நான் இருந்து என்ன சாதிக்க இருக்கிறேன்? இல்லை அங்கு வந்து தான் என்ன சாதிக்கப் போகிறேன்? எங்கிருந்தாலும் நான் செய்யக் கூடியது எதுவுமில்லை. உங்களுக்கெல்லாம் சிரமம் கொடுக்காமல் இங்கேயே என் காலத்தை கழித்து விடுவதுதான், நினைத்துப் பார்த்தால் மிகவும் சரி என்று தோன்றுகிறது. எனினும் ஒரு முறை அவசியம் வருகிறேன். இன்று மனோகரனிடமிருந்து மணியார்ப் வந்திருந்தது.