பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/97

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

95 |  வெள்ளியங்காட்டான் 

05:11.1962

இரத்தினபுரி காலனி

தமிழ்நாட்டில் நேசிகக்கூடியது எதுவுமில்லை!

அன்புச் செல்வி,

உன் கடிதம் கிடைத்தது. நான் என் எழுத்து வேலையைத் தொடங்குமுன் என் பேரன் பேத்திகளை ஒருமுறை கண்குளிரப் பார்த்தபின்தான் பேனா எடுக்கிறேன். மகேந்திரன் நெற்றியில் இட்டிருக்கும் பொட்டு, அவன்தலையில் முடிந்திருக்கும் மலர்ச் செண்டு, ரவிந்திரன் கோர்க்கப்பட்டிருக்கும் அழகுக் கரங்கள்; குல்லாய் வைத்திருப்பது போல் அடர்ந்து கருத்திருக்கும் கூந்தல், ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய உன் முகச் சாயல் முழுதும் ரவியின் மூலம் கண்டு இன்புறுகிறேன். ஆயினும் என்ன? என் பேத்தி குமுதமே என்னை அதிகமாக மகிழ்விக்கிறாள். என்மேல் பல குற்றச்சாட்டுகளை அவள் குறுகுறு பார்வை அள்ளி வீசுகிறது. நானும் ஒரு பைத்தியம் போல் சிரித்துக் கொள்கிறேன்.