பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/98

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

96 |  ஒரு கவிஞனின் இதயம்

என் பிரதி பண்ணும் வேலையும் முடியும் தறுவாய்க்கு வந்துவிட்டது. அதிகமாகப் போனால் இன்னும் 10 நாட்கள்தான். அதற்குள் முடிந்துவிடும். என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. ஆனால், அது என் நண்பரிடம் கொடுத்து வைத்திருக்கிறேன். கிட்டத்தட்ட 110-0-0 ரூபாய் இருக்கும். அந்தப் பணம் என் கைக்கு வரவேண்டுமானால் நான் தை மாதம்தான் வரையும் இங்கு காத்திருக்க வேண்டும். நெல் அறுவடை தை மாதம்தான். அறுவடையானதும் நான் நிச்சயம் புறப்படக் கூடும். மொத்தம் என்ன செலவாகும் என்று என்னால் திடமாகச் சொல்ல முடியாது. ஆயினும் எனக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறது. மனோகரனிடமிருந்து கடிதமே இல்லை. மனோகரன் உப்பிலிபாளையத்தில் இரவுப்பள்ளி. தொடங்க இருப்பதாக இங்கு வந்தபோது சொன்னான். பண விசத்தைப் பற்றி எதுவும் அவனிடம் சொல்ல நான் தயங்குகிறேன். அங்குள்ள நிலைமை என் செளகர்யத்திற்கு ஒருக்கால் பொருந்தாமலும் இருக்கலாம். நான் யாருக்கும் தொந்தரவு தரமாட்டேன். எனவே நான் காத்திருக்க வேண்டியதுதான் நல்லதாகப் படுகிறது. ஆயினும் என்ன? என் புத்தகம் அச்சாகி வெளிவருமானால் உன் தந்தை எவ்வளவு பெரிய காரியத்தைச் சாதித்திருக்கிறார் என்பது உனக்கும் புரிந்து விடும். உன் தந்தையின் உள்ளம் எத்தனை விசாலமானது, எத்தனை ஆழமானது என்பதும் விளங்கும். உனக்கு மட்டும் அன்று. தமிழ்நாட்டுக்கே அப்போதுதான் புரியப்போகிறது. இன்னும் இரண்டொரு மாதங்கள் காத்திருந்து பார். நான் இங்கிருந்து புறப்படுவதொன்றே - அதற்கேற்ற செளகர்யங்களைத் தேடிக் கொள்வதொன்றே இனி என் முன்னிருக்கும் வேலை. இது புத்தகமானால் எனக்குக் கொஞ்சம் வருமானம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அதுவும் என் ஆயுள் வரையும் கிடைக்கும் என்பதில் தடையிருக்காது. அதற்குப் பின்தான் நான் ஆந்திராவிற்குச் செல்வேன். அல்லது பெங்களூரில் தங்கி வசிப்பேன். எப்படியிருப்பினும் ஒரு தடவை பாண்டிச்சேரி சென்றபின் தமிழ்நாட்டிற்கு வரவே