பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

ஒரு கோட்டுக்கு வெளியே ...



கொழுப்பு வந்துட்டோ? நாய்க்குப் பொறந்த பேய்ப்பய மவன, விக்கது கருவாடு. இதுல வேற திமுரால?"

பலவேச நாடார் அவரை அடிக்கப் போவதுபோல் துள்ளினார். நாராயணசாமியும் எழுந்தார்.

"நான் கருவாட்டு வியாபாரி தாமுல. ஒன்ன நெத்தலிக் கருவாட்ட நசுக்குற மாதிரி நசுக்கறனா இல்லியான்னு பாரு. ஒன் நொட்டுக் கைய வேற எங்கேயும் வச்சிக்கல! இங்க நடவாது."

பலவேச நாடாருக்குத் தெரியும், நாராயணசாமியை, தான் ஒருத்தனால் அடிக்க முடியாது என்று. அதற்குள் சின்னையா பெரிய்யா மக்கள், 'கை கொடுக்க' வருவார்கள். வந்தவுடன் கை நீட்டலாம்'. அவர் எதிர்பார்த்ததுபோல் சத்தங் கேட்டு, அவரது 'சொக்காரர்கள்' ஓடிவந்து *செருக்கி மவன இங்கேயே புடம் போடணும்" என்று நாராயணசாமியை சூழ்ந்தார்கள். நாராயணசாமி, வயிற்றுக்குள் இருந்த பிச்சுவாக் கத்தியை எடுத்தபோது, லேசாக வழி கிடைத்தது. மக்கடையில் இருந்தவர்கள் அவரைத் தள்ளிக்கொண்டே, "விடுடே, அவரு சங்கதிதான் தெரிஞ்சதாச்சே. பெத்த தாயையே தேவடியான்னு கேக்கவரு. நீயுமா கெட்ட வார்த்த பேகறது" என்று தாஜா செய்து கொண்டே, அந்தச் சாக்கில் அவர்களும் போய்விட்டார்கள்.

எட்டுமுடி மல்வேட்டி கட்டி, பாப்ளேன்' சட்டை போட்டு, கழுத்தில் * மேரியல்' மடிப்புக் கலையாமல் பாம்பு மாதிரி தொங்க, கையில் குடையுடன் போய்க்கொண்டிருந்த மாரிமுத்து நாடார், பால் பாக்கியைக் கேட்பதற்காக வந்தார். மைத்துனர், தனக்காகப் போராடுவது கண்டு. அவர் கண்கள் பனித்தன. லேசாக. நீர்கூட - அவர் கொடுக்கும் 'தண்ணீர் பால் மாதிரி' அரும்பியது. மச்சானைப் பார்த்ததும் பலவேசம் ஆவேசங்கொண்டார்.

"எல்லாம் எங்க அத்தானால வந்தது. செருக்கி மவள கையக்காலக் கட்டி கிணத்துக்குள்ள அமுக்காம போலீஸ்ல அடிபட்டுட்டு வந்திருக்காரு."

மாரிமுத்து நாடாருக்குத் துணுக்கென்றது. "இவனே இல்லாத விஷயத்தக் கிளப்புவான் போலுக்கே! உண்மையிலேயே துடிச்சிப் போனானா? அல்லது அடிபட்டார்னு விளம்பரப்படுத்துறதுக்காக ஜாலம் போடுறானா? இத விடக்கூடாது.' மச்சானப் பாத்து, நேரடியாகவே கேட்டார். நீண்ட காலத்திற்குப்பிறகு இப்போதுதான், நேரிடையாக அவர் பேசினார்: