பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

ஒரு கோட்டுக்கு வெளியே ...



பக்குவமாகவும், வேகமாகவும் எடுக்கும் உலகம்மையால், நூலைப் பிரிக்க முடியவில்லை . அவளைப்போல், நூலிழைகளும் அற்றுக்கொண்டே போயின, நேரம் முன்னேறிக் கொண்டிருந்தது. இதற்கு மேலும் நேரங் கடந்தால் வயலில் சேர்க்க மாட்டார்கள்.

வந்தது வரட்டும் என்று நினைத்தவள்போல, ஜாக்கெட்டை எடுத்து 'விளக்குழியில்' வைத்துவிட்டு, புடவை முந்தானையை மார்போடு மார்பாக இழுத்துப் போர்த்தினாள். அது மார்பகத்தை மறைக்கும்போது, வயிற்றைக் காட்டியது, வயிற்றை அவள் மறைக்கப் பார்த்தால், அது மார்பகத்தின் மானத்தை வாங்கியது. எதை அதிகமாக மறைக்க வேண்டும். எதை குறைவாக மறைக்க வேண்டும், எந்த அளவிற்கு மார்பகமும். வயிறும் அந்தத் துணியால் மறைக்கப்பட வேண்டும் என்று விகிதாச்சார கணக்குப் போட்டாள். பிறகு வயிற்றைக் காட்டிக்கொண்டு அந்த வயிற்றுக்காக அவள் ஓடினாள். பிறர் கண்களில் இருந்து தப்புவதற்காக, வேகமாக ஓடினாள்.

அவள் மாலையில் திரும்பி வரும்போது, புளியந்தோப்பில் நின்று கொண்டிருந்த பிராந்தனும்' 'பொந்தனும்' மார்புச் சேலைக்குள் அடுத்தவக நிலத்தில் அவள் கட்டிய வீட்டைப் போல' மார்பகங்கள் விம்மிப்புடைத்திருப்பதைப் பார்த்தார்கள். மழைச்சாரல் வேறு. சேலை ஒட்டிக்கிடந்தது. பிராந்தனுக்கு நல்ல வெறிகூட. முண்டியடித்துக் கொண்டிருந்தவனை, பீடி ஏஜெண்ட் தடுத்தான். ஆனால், அவனும், 'பார்த்தால் முகம் தெரிவதுபோல் கண்ணாடி மாதிரி ஜொலித்த அவள் வயிற்றைப் பார்த்து கொஞ்சம் கிறங்கிப் போனான். அவள், சட்டாம்பட்டியில் பல சாமான்களை வாங்கி மடியில் போட்டிருந்ததால் மடியில் தோண்டி மாதிரி மாறிய புடவை முந்தானை, மார்புத்திரட்சிகளை அதிகமாக மறைக்கவில்லை. அந்த உடம்பு கிடைக்காமல் போன நிலையை நினைத்துக்கொண்டான் பொந்தன். அவனுக்குக் கோபம் தாங்க முடியவில்லை. ஜாடையாக லாவணி போட்டான்.

"ஏல இப்பல்லாம் ஜாக்கெட் போடாம போறாளுவள ஏமுல?"

பிராந்தன், இன்னும் வெறியில் இருந்ததால், அவனால் பதிலளிக்க முடியவில்லை. வெறி இல்லையென்றாலும், அவன் குதர்க்கப் பேச்சில் ஒரு பிச்சைக்காரன். அவனுக்கு, வெண்டை வெண்டையாகத்தான் பேச வரும். ஆகையால் பீடி ஏஜெண்டே, தான் போட்ட கேள்விக்குத் தானே பதிலளித்தான்.