பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்றது பற்ற...

141



இங்கே வந்து சிறுமியர். சிறுவர் பெட்டிகளைப் பின்னிக்கொண்டும், மேளங்களுக்குச் 'சிங்கி' அடித்துக்கொண்டும், வயக்காட்டில் புரளும் அம்மா அய்யாக்களுக்குக் கஞ்சி கொண்டுபோய்க் கொடுத்துக்கொண்டும், தொழிலையே ஒரு கல்வியாக நினைத்து ஈடுபட்டிருப்பதைக் கண்டால், ஒருவேளை மகிழ்ந்து போகலாம். 'பலனை பகவானிடம் விட்டுவிட்டு கர்மமே கண்ணாயிரு' என்ற உயர்ந்த தத்துவத்தைப் போதிக்கும் கீதைக்கு, பிராக்டிகல் உதாரணம்போல், பெரும்பாலான மக்கள், மேல்ஜாதிக்காரர்களின் சின்னப் பையன்கள் கூட "ஏய் மதுர! ஒன்ன எங்கய்யா கூட்டிக்கிட்டு வரச் சொன்னார்" என்று சொல்வதைக்கூட ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாதவர்கள்; சொல்லப்போனால், அறுபது வயது மதுரைக்கு, அந்த ஆறு வயதுச் சிறுவன், அப்படிச் சொல்வதில் சந்தோஷமாம். கொஞ்ச காலத்திற்கு முன்னால், 'ஏய்', என்பதற்குப் பதிலாக, 'சின்ன மொதலாளிகள், 'ஏடா' என்று கூப்பிடுவார்களாம். மதுரையின் அய்யா எழுந்திருக்காமல் இருந்தால் "ஏண்டா எங்க அய்யாகிட்ட உதபடணுமா" என்று, அந்தக் காலத்துச் சிறுவர்கள்" கேட்பார்களாம்.

இப்படிச் சொல்வதாலேயே, அங்கே இருப்பவர்கள், பதினெட்டாம் நூற்றாண்டு நீக்ரோக்கள் மாதிரி இருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. பல இளவட்டங்கள், மேல்ஜாதிக்காரர்களை அளவுக்குமேல் பொருட்படுத்தாதவர்கள். சிலசமயம், "நமக்கு எதுக்காவ மக்கடையில் தனிக் கண்ணாடி டம்ளர் வைக்கணும்? இவங்களவிட நாம எந்த வகையில குறஞ்சிட்டோம்? நாமளும் பல் துலக்குறோம், வேட்டி கட்டுறோம், பிள்ளியள பெத்துக்கிடுறோம்" என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டும் வருகிறார்கள். தங்களின் இளஞ்சந்ததியினர், முதலியார், நாடார், தேவர் வகையறாக்களை, 'அவன் இவன்' என்று சேரிப்பகுதிக்குள் பேசுவதைக்கேட்டு, பலகிழவர்கள் கிடுகிடுத்துப் போய் விட்டார்கள். "காலம் கலிகாலம் கெட்டுப்போச்சி, இல்லன்னா 'ஊர் முதலாளிகள' இந்த ஊர்மேல போன பய பிள்ளிக 'அவன் இவன்'னு பேசுமா? இது மதுர வீரனுக்கே அடுக்குமா?"

'காலேஜ்' படித்த அருணாசலம் தலைமையில் பல இளைஞர்கள், தங்கள் ஜாதியினருக்கு, ரோஷம் வரவில்லையே என்று அலுத்துப்போய் விட்டார்கள். இவர்களைக் கரையேற்றுவது கடவுளாலும் முடியாது என்று அவர்களை கைவிடப்பட்ட கேஸ்களாக' நினைத்து விட்டார்கள். எந்த மனிதனுக்கும் அல்லது சமூகத்திற்கும் தன்னைச்சுற்றி உள்ளவற்றை 'கான்ஷியஸ்ஸாகப்' பார்க்கும் உணர்வை ஏற்படுத்திய