பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்றது பற்ற...

143



"நாடாரம்மா ஒண்ணுந் தள்ளியிருக்கல. வாருக்காரங்கதான் தள்ளி வச்சிருக்காக."

"இவுக, அவுக கால் கையில விழுந்து ஊரோட ஒத்துப்போவ வேண்டியதுதான. இவுக வீம்பு பண்றதும் தப்புத்தான். என்ன ராமக்கா நான் சொல்றது"

திடீரென்று ஒரு ஆண்குரல் முழங்கியது:

"ஊர்லயே உருப்படியா இருக்கது இது ஒண்ணுதான். அதயும் கெடுக்கப் பாக்கிங்களா?"

தலையைத் தாழ்த்திக்கொண்டு, அந்தப் பெண்கள் சொல்வதை ரசிகத் தன்மையுடனும், சிறிது சங்கடத்துடனும் கேட்டுக்கொண்டிருந்த உலகம்மை, கம்பீரமான அந்தக் குரலைக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தாள். அருணாசலம் சிரித்துக் கொண்டு நின்றான். அவளுக்குக் கொஞ்சம் கோபங்கூட, 'நாடாரம்மாள்'னு சொல்லாண்டாம். அவுக இவுகன்னாவது சொல்லலாம். மேல்சாதி பொம்பினய அது இதுன்னு மாடு மாதிரி நெனச்சிச் சொன்னா என்ன அர்த்தம்?"

உலகம்மை, சற்று ரோஷத்தோடு அவனைப் பார்த்தாள், ஆனால் அவன் முகத்தில் படர்ந்த அனுதாபத்தைப் பார்த்ததும், கள்ளங்கபடமற்று அவன் சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், அவளுக்குக் கோபம் புன்னகையாகியது.

"பரவாயில்ல. ஒங்கள மாதுரி ஒவ்வொரு பெண்ணும் நடந்துக்கிட்டா ஆயிரக்கணக்கான வருஷமா கர்நாடகமா இருக்கிற இந்தக் கிராமம் ஒரே வருஷத்துல பழயத உதறிப் போட்டுடும்! கவலப்படாதிங்க! ஊரே ஒங்கள எதிரியா நெனச்சிருக்கதுக்கு, நீங்க பெருமைப்படணும்! ஏன்னா அவங்க எல்லாரும் ஒண்ணாச்சேர்ந்தா தான் ஒங்களுக்கு இணையாய் ஆக முடியுமுன்னு தெரியுது. என்னைக்கேட்டா அப்படியும் அவங்க ஒங்களுக்கு இணையாவ முடியாது! இதுங்க பேச்சக் கேட்டு கையில காலுல விழுந்துடாதிங்க, விழமாட்டிங்கன்னு எனக்குத் தெரியும்!"

அருணாசலம் மேற்கொண்டும் பேசிக்கொண்டே போயிருப்பான். சுற்றி நின்ற பெண்கள், அவனைப் பேசவிடாமல், இடைமறித்தார்கள்.

"இவன், 'அவன் தம்பி அங்குதன் மாதிரி' இவன் பேச்சைக் கேளாதிக நாடாரம்மா, கோளாறு பிடிச்ச பயல் போன வருஷம் இந்த மாதிரித்தான் ஒரு அடாவடி பண்ணிட்டான்! எங்க சேரில தீண்டாமக் கூட்டமுன்னு ஒண்ணு போட்டாங்க. பெரிய பெரிய ஆபீசருங்க, மாரிமுத்து நாடாரு. அவரு சின்னய்யா மொவன் எல்லாரும் நாடார் போட்டாங்க. ன எங்க சேரிஷம் இந்த