பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

ஒரு கோட்டுக்கு வெளியே ...


ஏற்பட்டதாகச் சொல்லித் தப்பித்த நிகழ்ச்சி ஒன்றையும் அவர் நினைவுபடுத்திக் கொண்டார்.

சமூக விரோதியாவதற்குரிய தகுதிகள் என்ன என்பதைத் தீர்மானிக்க நினைத்தவர்கள்போல், மாரிமுத்து நாடாரும், பலவேச நாடாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபோது இருவர் முகத்தையும் பார்த்த ஹெட்கான்ஸ்டபிள், எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டார்.

“பட்டைச் சாராயம், விபச்சாரம், சாமி சிலையைக் கடத்துவது. திருட்டு.”

இறுதியில், ஊரில் பிரபலமாகியிருக்கும் பட்டைச் சாராயமே எடுத்துக் கொள்ளப்பட்டது. சமயம் வாய்க்கும்போது, காய்ச்சிய சாராயம், சட்டியுடன், உலகம்மையின் வீட்டில் வைக்கப்படவேண்டும் என்றும், தகவல் அறிந்ததுமே, ஹெட்கான்ஸ்டபிள், தானாக வருபவர்போல், வருவார் என்றும் போர் வியூகம் வகுக்கப்பட்டது. அந்த வியூகத்தைக் கலைக்கும் எதிர் வியூகமாக, கான்ஸ்டபிளுக்கு ‘காளி மார்க்கை’ உடைக்கிற சாக்கிலும், வெற்றிலைபாக்கு வாங்கிக் கொடுக்கிற சாக்கிலும், தலையைச் சொறிந்து கொண்டு நின்ற ஒரு ஹரிஜனப் பண்ணையாள், நேராகப் போய் அருணாசலத்தின் காதைக் கடித்தான். அருணாசலம் பல்லைக் கடித்துக்கொண்டு. பல பெட்டிஷன்களைத் தட்டி விட்டான். உலகம்மையின் வீட்டுக்கு வந்து, தனியாக இருந்த மாயாண்டியையும் எச்சரித்துவிட்டுப் போய் விட்டான். பல அட்டூழியங்களை‘தற்காப்புக்காகச்’‘தற்காப்புக்காகச்’ இதுவரை ‘இம்பெர்ஸனலாகச்’ செய்து வந்த கான்ஸ்டபிள், கள்ளச்சாராய அட்டுழியத்தை ‘பெர்ஸனலாக’ நடத்த நினைத்து. மாரிமுத்து நாடாரின் சமிக்ஞைக்காகக் காத்திருந்தார். அப்போது அருணாசலம் போட்ட மனு அவருக்கு எஸ்.பி.யால் அனுப்பப்பட்டதுடன், அவரது விளக்கமும் கேட்கப்பட்டிருந்தது. நிச்சயம் டிரான்ஸ்பர் வந்துவிடும் என்பதைப் புரிந்துகொண்ட ஹெட்கான்ஸ்டபிள், அது வருவதற்குள், உலகம்மைக்கும், அருணாசலத்திற்கும் ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்தார்; தவியாய்த் தவித்தார்.

இதே சமயத்தில் உலகம்மையின் வீட்டுக்குப் பல ஹரிஜனப் பெண்கள் வந்துபோகத் துவங்கினார்கள். ஓரளவு அமைதியும், அனுதாபமும் கொண்டிருந்த ஊர் ஜனங்கள். இதைப் பார்த்ததும் மீண்டும் கோபத்தில் தத்தளித்தார்கள். ஒரு மேல்ஜாதிப் பெண்னோட வீட்டுக்கு. பள்ளுப்பறையுங்க வருதுன்னா அதுவும் ஊர்க்கட்ட மதிக்காம வருதுன்னா அது பெரிய விஷயம் இது அந்த ஊரை மதிக்காமல்