பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடை விரிந்திட...

163


குடுத்தேன். ஒடனே ஒங்கய்யா ஒரு எட்டணாவ நீட்டுனாரு ‘நான் கூலிக்காரன் இல்ல மாமான்னு’ ஒய்யாகிட்ட சொல்லிட்டு, ‘மருமவன் பேர்ல செருவ’ ‘இருக்கட்டுமுன்னு’ தமாஷா சொல்லிட்டு வந்துட்டேன். வேணுமுன்னா ஒய்யாகிட்ட கேட்டுப் பாரும், மாப்பிள்ள. ஊருக்குல்லாம் வேலி அடச்சவன் நான். இப்ப எனக்கே வேலி வந்துட்டா, எப்டி மாப்பிள்ள? ஒம்ம மனசு இளகாதா? ஒய்யாவுக்கும் இப்டி வராதுன்னு நினைக்கியா? நீரு கொண்டு வந்திருக்கிற ஓலை சாதாரண பனையோல இல்ல! என் சாவச் சொல்ல வந்துருக்கிறதுஷ்டி ஓல, மாப்பிள்ள, துஷ்டி ஓலை!”

ஐவராஜாவிற்கு, அதற்குமேல் மனங்கேட்கவில்லை. ஊர்க்காரன்களைச் சபித்துக்கொண்டார். குளத்து வாய்க்கால் இல்லாத தன் வயலைத் திட்டிக்கொண்டார். முள் கம்பியால் பாதி இடத்தை அடைத்துவிட்ட அவர், மேற்கொண்டு வேலியைத் தொடராமல் மாயாண்டியைப் பார்க்காமலே பேசினார்:

“நான் செய்யுற வேலையில எனக்கொண்ணும் சந்தோஷம் இருக்கதா நெனைக்காண்டாம்! ஊர்க்காரங்க பேச்சைக் கேக்காட்டா ஒம்ம மவா வயசுல இருக்கிற என் மவளக் கரையேத்த முடியாது! இந்த வேலிய நான் அடைக்காட்டா, ஊர்ஜனம் என்னச் சுத்தி வேலி போட்டுடும்! இப்பவும் குடி முழுவிடல. பேசாம ஊர்க்காரங்க காலுல கையில போயி விழும்! செய்ததுல்லாம் தப்புன்னு தோப்புக்கரணம் போட்டாலும் பாதகமுல்ல! அவங்க வந்து, என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாப் போதும்! நீரு ஊரோட ராஜியா போயிட்டீர்னா இந்தத் தோட்டத்துல வேணுமுன்னாலும் குடிச போட்டுக்கும். நானும் மனுஷன்தான், மாமா.”

மாயாண்டி, அந்த ‘மனுஷனையே’ பார்த்தார். அவன் சொல்வதில் ‘மனுஷத்தனம்’ சாகாமல் துடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். ஆனால் எண்சாண் உடம்பை, எப்டி ஒரு சாணாக்குவது?

ஒருசாண் கயிற்றில் உயர்ந்தோங்கிய பனைமுகட்டில் நின்று. ஒரு மனிதப் பனையே நிற்பதுபோல் பனைமண்டையோடு, தன் மண்டையை அழுத்தி வைத்துக்கொண்டிருந்த மாயாண்டி, உடம்பு ஒரு சாணாகக் கூச, ஊர்க்காரர்களிடம் கெஞ்சுவதற்காக, அந்தத் தோட்டச்சுவரில் ஏற முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார். சந்தர்ப்பம் சரியாக இருந்தால் நல்லவராக இருக்கும் ஐவராஜா, கிழவரின் கையைத் துக்கி அவரை தோட்டச்சுவரில் ‘கரையேற்றினார்’ “சீக்கிரமா வாரும். ஊர்க்காரனுக ஒரு வார்த்த சொல்லாட்டா நீரு