பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடை விரிந்திட...

169


இப்போ இடுப்பு ஒடிய நிக்கதப் பாக்கதுக்கு ஒனக்கே நல்லா இருக்கா மாரிமுத்து ஆசாரியார, ஒமக்கு எத்தன தடவை நொங்கு வெட்டித் தந்திருக்கேன்! தின்னத மறந்துட்டிரா?”

மாரிமுத்து நாடார், கூட்டம் மீண்டும் சலசலப்பு அடையாமல் இருப்பதற்காக, வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசாமல், ஈரத் துணியைச் சுத்திக் கழுத்தை அறுக்கப் பேசினார்:

“ஒம்ம மேல எங்க யாருக்குமே வருத்தங் கிடையாது. ஆனால் ஊர்க்காரன பொட்டப்பயலுவன்னு சொல்லிட்டு, நாயி ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சி கடைசில மனுஷனையே கடிக்கிறமாதிரி. சாப்புடுறதுக்கு மட்டும் வாய வச்சிக்கிட்டு பேசத்தெரியாம கிடந்த பறப்பயலுவசுட சேந்திக்கிட்டு, குலங்கோத்ரம் தெரியாம அருணாசலம் பயலுக்கு வாழப்பழத்தக் குடுத்து நம்ம எல்லாத்தையும் அவமானப்படுத்திட்டா நாங்க இருந்ததுலயும் கணக்கில்லாம செத்ததுலயும் கணக்கில்லாம தலயத் தொங்கப் போட்டுக்கிட்டு இருக்கோம்.”

மாரிமுத்து பேசியதும், அதுவரை தலைகளைத் தொங்கப்போடாத தலையர்கள். இப்போது அவற்றைத் தொங்கப்போட்டுக் கொண்டார்கள். மாரிமுத்து நாடார். “அதனால” என்று பேசத் துவங்கியபோது, அவரை அதிகமாய் மதிக்காத பலவேசமும், “அதனால” என்று சொல்லிவிட்டு. அதற்கு மேலும் பேசினார்:

“அதனால இப்ப சொல்றதுதான் எப்பச் சொல்றதும்: ஒம்ம மவா. அந்த அடங்காப்பிடாரி, ஊர்ல இருக்கிற ஒவ்வொரு ஆளுடைய கால்லுலயும் விழுந்து அய்யா சாமின்னு கெஞ்சணும். நடையாய் நடந்து, காலு கரையனும். பாத்துப் பாத்துக் கண்ணு பூக்கனும்! நின்னுநின்னு நடவாசல் தேயனும். அப்புறந்தான் அய்வராசா மச்சாங்கிட்டச் சொல்லலாமா, வேண்டாமாங்றதப்பத்தி ஊரு யோசிக்கும் நீரு வீணாப் புலம்புறதுல புண்ணியமில்ல!”

மாயாண்டியும் “புண்ணியமில்லை” என்று சொல்லிக் கொண்டார். நெப்பியவர்களையே அவர் பார்த்துக்கொண்டிருந்தார். இப்போது புலம்பவில்லை. தன்னைத்தானே அதட்டி, அடக்கிக் கொண்டார். இந்தச் சமயத்தில், பஞ்சாட்சர ஆசாரியார், “பொம்புள முண்டைக்கு இவ்ளவு திமிரு ஆவாது நீரும் அதிகமா இடங்குடுத்திட்டிரு அவள வந்து இவங்க கையில காலுல விழச்சொல்லும் வீணா நேரத்தப் போக்காதயும்” என்றார்.

கோ.12.