பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

ஒரு கோட்டுக்கு வெளியே ...



குத்திப்போட்ட ஆள தூக்கினா எப்டி? பாரும் நுழையப்படாது. அவரு கால்ல விழாத குறையா கெஞ்சையில அவர உயிரோட கொன்ன ஜனங்க! அவரு பொணமான பிறவு வரவேண்டியதில்ல அடச்சிப்போட்டுக் கொன்ன ஜனங்க இப்ப பூமியில் அடச்சிப்போட வந்தியளாக்கும்? அவரு உயிரக் கொன்ன ஆச தீராம, ஒடம்பையும் கொல்ல வந்திமளாக்கும்? யாரும் வரப்படாது! எங்கய்யாவ எப்டி அடக்கம் பண்ண னுமுன்னு எனக்குத் தெரியும்."

நுழையப்போன கூட்டம், தயங்கி நின்று, தலைவர்களின் முகங்களைப் பார்த்தது. கணக்கப்பிள்ளை ஆணையிட்டார்:

"ஏய்யா பாத்துக்கிட்டு நிக்கிய? ஊர்ல பொணம் கிடந்தா எப்டி? வீட்டில் அழுவுற பொணம் ஊர்ல நாறணுமா? பொம்புள அதுலயும் இவா அடங்காப்பிடாரி! அப்டித்தான் பேசுவா. கழுத்தப்பிடிச்சித் தள்ளிவிட்டு உள்ள நுழையுங்கப்பா? நீங்களும் பொணம் மாதிரி நின்னா எப்டி? உ.ம் ஜல்தி."

கூட்டத்தினர், மீண்டும் நுழையப் போனார்கள். உலகம்மை இரு கைகளையும் இரண்டு பக்கமும் அகலமாக விரித்து வாசலை அடைத்தாள்.

"யாரும் நுழையப்படாது! மருவாதியோடப் போங்க! இது ஊருல்ல. என்னோட வீடு நீங்க தள்ளிவச்ச வீடு! அப்டி நுழைஞ்சிங்கன்னா என் உயிர இப்பவே இந்த நொடியிலயே மாய்ச்சிடுவேன்! பாழாப்போன உயிரு போகலன்னா, நேரா கலெக்டர்கிட்ட போயி நீங்க எப்டி எப்டி 3வரச் சித்ரவத பண்ணிக் கொன்னிங்கன்னு சொல்லிடுவேன் ஏய்யா ரோஷங்கெட்டு நுழையுறிங்க பொணத்த நாறாமப் பாக்க வேண்டியது என் பொறுப்பு! நீங்க ஒண்ணும் பயப்படாண்டாம்! போங்கய்யா, கோடி நமஸ்காரம் போங்கய்யா, நல்ல மாட்டுக்கு ஒரே அடி. நல்ல மனுஷனுக்கு ஒரு சொல்லுதான் போங்கய்யா வேலயப் பாத்துக்கிட்டு! ஒங்கள யாருய்யா வெத்துல பாக்கு வச்சி அழச்சது?"

கூட்டம், இப்போது தலைவர்கள் ஆணையை எதிர்பார்க்காமலே பின்வாங்கியது. "இவ்ளவு வந்தும் இவா திமிரு அடங்கல பாரேன்" என்று ஒருசிலர் முணுமுணுக்க, பலர் அதற்குப் பதிலளிக்காமலே நகர, ஆணும், பெண்ணுமாக நிறைந்த கூட்டத்தில் அத்தனை பேரும், கிழக்குப்பக்கம் வந்து, தங்கள் மாஜி' இடத்தில் நின்று கொண்டார்கள்.

உலகம்மை, ஆவேசவயப்பட்டாள். ஐவராஜாவையும், பஞ்சாட்சர ஆசாரியையும், பலவேச நாடாரையும், ராமையாத் தேவரையும்,