பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலகம்மை நடந்தாள்...

191


“நீ என்னம்மா சொல்றே புரியுது, புரியாமலும் போவுது.”

“நான் இங்கேயே இருக்கலாமுன்னு நெனைக்கேன். ஒனக்கு இஷ்டந்தானா அண்ணாச்சி? ஒன் தங்கச்சிய இப்டிப் போன்னு சொல்றது நியாயமா?”

அருணாசலம் அதிர்ந்து போனவன்போல், அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். உண்மையிலேயே அவள் அசாதாரணமானவள்தான். ஊரை செண்டிமென்டலா மட்டும் பகைக்கல. ஐடியலாஜிகலாகவும் பகைச்சிருக்காள்! மேல்ஜாதி நெருப்புல புடம்போட்ட ஹரிஜனப் பொண்ணா மாறியிருக்காள்!”

“ஒன்னப் பார்த்ததும் என் உடன்பிறவாச் சகோதரியா நினைச்சவன் நான்! என்னைக்கு அய்யாவுக்கு கொள்ளி போட் டேனோ அன்னைக்கே நீ என் உடன்பிறந்த சகோதரியாயிட்டே. நீ எடுத்த முடிவும் நியாயந்தான் தங்கச்சி! ஒனக்கு ஒரு தொல்லையும் வராமப் பாத்துக்கிடவேண்டிய பொறுப்பு என்னோடயது! நிஜமாவே நீ இங்கே வ்ந்து தாழ்ந்த ஜாதியாகி, தாழ்ந்த ஜாதிய மேல் ஜாதியாக்கிட்ட இந்த நாட்ல, ஹரிஜனங்களை மேல்ஜாதியாக்குறது இந்த ஜென்மத்துல நடக்காது. ஆனால், மேல்ஜாதி ஏழை எளியவங்களை, ஹரிஜனங்களாய் மாத்துறது லேசு. பிரபுத்துவ மனப்பான்மையில், தங்களோட நியாயமான நிலையைப் புரிஞ்சிக்காத மேல்ஜாதி ஏழை பாளைங்களை, கீழ்ஜாதி ஹரிஜனங்களாய் நடத்தணும். ராமானுஜர், ஹரிஜனங்கள. ஐயங்கார்களா மாத்துனதா ஐதீகம். அவரு, வைணவத்துக்காக மாத்துனாரு நாம. பாட்டாளி வர்க்கத்துக்காக தலைகீழாய் மாத்தணும். நாட்ல நிலவுற வகுப்புக்கள வர்க்கப்படுத்தணும். மேல் ஜாதி ஏழையும், கீழ் ஜாதி ஹரிஜனங்களும் ஒரே வர்க்கமாய் போற காலம் வரத்தான் போவுது. இதே முறையில பார்த்தால், நீ சேரியிலே சேரப்போற காரியம், எதிர்காலத்தில் ஒருவேளை நடக்கப்போற ஒரு சமதர்மப் புரட்சிக்கு ஒரு காரணமாய் அமையலாம். இந்த வகையில் இந்த ஊர்ல ஒரு புரட்சி