பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜாவாகி....

25



அடுப்பில் தீ மூட்டி, அய்யாவின் பசித்தீயை அணைப்பதற்காக உலகம்மை கிட்டத்தட்ட ஓடிக்கொண்டிருந்தாள். வழியில் அவளுக்குத் தெரிந்த கிழவி ஒருத்தி. "யாரு ஒலக்கமாடி பேத்தி ஒலவுவா?" என்று குசலம் விசாரித்தாள்.

"பாட்டி சொல்றேன்னு தப்பா நெனக்காத. என் பாட்டி உலகம்ம பேரத்தான் ஒலக்கமாடின்னு சொல்லிப் பழகிட்ட. என் பெயரயாவது உலகம்மான்னு ஒழுங்காச் சொல்லேன். ஒலவுன்னு சொன்னா கேக்கதுக்கு நல்லா இல்ல்."

"மொளச்சி மூணு இல விடல. வாயப்பாரு. நான் அப்படித்தாண்டி சொல்லுவேன். ஒலவு, ஒலவு, ஒன்னச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. ஒன் பாட்டியும் நானும் உயிர விட்டுப் பளகுனம். என்னழா நிக்காம போற? பாத்துப் போடி, எதுலயும் மோதிராத."

உலகம்மை வீட்டுக்குள் நுழைந்தபோது. கிழவி சொன்ன மாதிரி அவள் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்தச் சின்ன ஓலைவீட்டில், அவள் அய்யா மாயாண்டி நாடார் கட்டிலில் முடங்கிக் கிடந்தார். மாரிமுத்து நாடாரின் தங்கை புருஷன் பலவேசம், "நீரு இந்த வீட்ல இருந்துடுறத பாத்துப்புடலாம். ஒம்மவளுக்கு அவ்ளவு திமிரா? திமுர அடக்குறனா இல்லையான்னு பாரும்" என்று அவரை அடிக்காத குறையாகக் கத்திப் பேசினார். உலகம்மையைப் பார்த்ததும், அவர் குரல் பலமாகியது.

4. சதியினைப் புரிந்து...

லவேச நாடார், லேசுப்பட்டவரல்ல; எவரையும் கைநீட்டி அடித்து விடுவார். அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் அனைத்தையும், ஆபாசம் என்று தாராளமாகச் சொல்லலாம். இதுவரை, பலரை அவர் அடித்து, அவமானப் படுத்தியிருந்தாலும், இன்னும் அவர் அடிபடவில்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே, அற்பக் காரணத்துக்கும், அவர் கைநீட்டி விடுவதால், ஊரில் அவரை ‘நொட்டுக் கையன்' என்பார்கள். 'கோபம் இருக்கும் இடத்தில், குணம் இருக்கும்' என்பார்கள். ஆனால் இவரோ கோபம் ஒன்றை மட்டுமே குணமாகக் கொண்டவர். மச்சான் மாரிமுத்து நாடாரையே ஒரு தடவை அடிக்கப் போய்விட்டார். மூன்று வருடங்களுக்கு முன்புவரை. மனைவியை "ஒங்கண்ணங்கிட்ட போயி நகப் பாக்கிய வாங்கிட்டு வா, ஆயிரம் ரூபா கோ .3,

கோ.3.