பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்மை உரைத்து...

35


மாயாண்டி அழுவதை நிறுத்திவிட்டு மகளைப் பெருமையோடு பார்த்தார். அடுப்பை மூட்டிய உலகம்மையை, அவர் தடுக்கவில்லை. தீ மூட்டிக் குழலை வைத்து உலகம்மை ஊதினாள். தீப் பிடிக்கவில்லை. ஈரச்சருகு போலும், சிறிது நேரம் குழலை வைத்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.

குப்புறப்படுத்திருந்த மாயாண்டி, எழுந்து உட்கார்ந்து, சுவரில் தலையை வைத்துக்கொண்டே “நீ இவ்ளவு ஒத்தாசை பண்ணிருக்க இதனால பலவேசத்துக்கிட்டகூட இழுபடுறோம். ஆனால் மாரிமுத்து சம்சாரம் பனையேறிப் பய மவளக்காட்டி என் பொண்ண கரயேத்த வேண்டியதிருக்குன்னு லட்சுமிகிட்ட சொன்னாளாம். லட்சுமி இப்பதான் வந்து சொல்லிட்டுப் போனா” என்றார்.

உலகம்மை, அவர் சொல்வதை, காதில் வாங்காதது மாதிரி வாங்கிக் கொண்டாள். திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தாள். இப்போது குழப்பம் இல்லை. அசாத்தியமான துணிச்சல் ஏற்பட்டது. “நமக்கா, இவ்வளவு தைரியம்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டும், மெச்சிக்கொண்டும், உலகம்மை தீக்குழலை எடுத்து ஊதினாள்.

தீப்பிடித்துக் கொண்டது.

5. உண்மை உரைத்து...

ந்தக் கிணற்றைச் சுற்றி ஏழெட்டுத் தென்னைமரங்கள் கோணல் மாணலாக நின்றன. சில குலைகளில் தேங்காய்கள் கீழே விழுந்து விடுபவைபோல் தொங்கிக் கொண்டிருந்தன. பச்சைத் தென்னை ஒலைகளுக்கிடையே செவ்விளனிக் காய்கள் காட்டு ஓணானைப்போல், பயமுறுத்தின. சில தேங்காய்கள் விழுந்து, கிணற்று நீரில் மிதந்தன.

ஒரு பக்கம் வாழைத்தோப்பு: இன்னொரு பக்கம் தக்காளிச் செடிகள். தக்காளிச் செடியில் ‘நாளைக்கோ மறுநாளோ பெரியவளாகப் போகிற சிறுமிகள் மாதிரி’ கன்னிக் காய்கள். பசும்பொன் நிறத்தில் இருந்து, சிவப்பு நிறமாக மாறும் ‘அடோலசன்ஸ்’ காய்களாக, பசுமை நிறத்தை செந்நிறம் விரட்டியடிக்கும் வேகத்தைக் காட்டுவதுபோல் காற்றில் ஆடின. கைக்குழந்தைகளை மார்பகத்தில் வைத்துப் பாலூட்டிக்கொண்டே, மார்பகத்தை மாராப்புச் சேலையால் மூடும் தாய்மார்களைப்போல, குலை தள்ளிய வாழைகள், அந்தக் குலைகளை, தன் இலைப்புடவையால் மறைத்தும், மறைக்காமலும்