பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஒரு கோட்டுக்கு வெளியே ...


பட்டதாரிப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் பல பட்டதாரிப் பெண்களோடு பழகியபின், படிப்பிற்கும் சமுதாயப் பிரக்ளுைக்கும் சம்பந்தம் இல்லை என்பது மட்டுமல்ல, இந்த பட்ட குவாலிபிகேஷனே அந்தப் பிரச்சினைக்கு ஒரு டிஸ்குவாலிபிகேஷன் மாதிரியும் அவனுக்குத் தென்பட்டது.

ஆகையால், அய்யா பார்க்கிற பெண்ணைக் கட்டிக்கொள்ள அவன் சம்மதித்தான். பெண்ணின் படிப்பைப் பற்றி கவலைப்படவில்லை என்றாலும், எஸ்.எஸ்.எல்.சியாவது இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவன் தந்தை “மாரிமுத்துநாடார் முப்பதாயிரம் ரொக்கமாத்தாரேங்கறார். பொண்ணுதான் படிக்கல. நமக்கும் நாலஞ்சி வயசுப் பொண்ணுங்க இருக்கு” என்று இழுத்தபோது, அதுவும் ஏழெட்டுப் பிள்ளைகளைப் பெற்று, இதர பிள்ளைகள் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காகவே, முதல் பிள்ளையை, அவர்களின் சார்பாகக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்த தந்தையின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேச அவன் விரும்பவில்லை. வரதட்சணை வாங்கக்கூடாது என்றும் அவன் வாதாடவில்லை. பெண்ணுக்கு, சட்டத்தில் இருக்கும் சொத்துரிமை வீடுகளில் அமலாகும் வரைக்கும், அப்படி அமலாக வேண்டும் என்று வற்புறுத்தப்படாதவரைக்கும், வரதட்சணை ஒழிப்பு இயக்கங்களும், ரேடியோப் பேச்சுக்களும், டெலிவிஷன் பேட்டிகளும். சம்பந்தப்பட்டவர்களின் ஈகோவை திருப்திப்படுத்தும் ‘பேஷன்’ என்றும் அவன் உறுதியாக நம்பினான். பெண்ணுக்குச் சேரவேண்டிய சட்டப்படியான சொத்துக்குக் கொடுக்கப்படும் நாகரிகமான நஷ்ட ஈடுதான் வரதட்சணை என்று தப்பாகவோ சரியாகவோ நினைத்தான்.

கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் முதன் முதலாகப் படிப்பவன் ஒரு ஆட்டுக்கிடா மாதிரி ஆட்டுக்கிடாவை, மற்றவற்றைவிடச் செல்லமாக வளர்த்து, அதன் தலையில் பூச்சூடி, கோவிலில் வெட்டுவதுமாதிரிதான், ஏழைப் பெற்றோர்கள். ஒரு பையனையாவது படிக்க வைத்து, நல்ல உணவளித்து பட்டம் என்ற பூவைத் தலையில் சூடி, பணக்காரவீட்டுக் கோவிலில் பலிகிடாவாக்குகிறார்கள். பணக்காரச்சாமி, கிடாக் கறியை, வளர்த்தவனுக்குக் கொடுக்காமல் தானே சாப்பிடுவதும் உண்டு. என்றாலும் ஏழைப்பையன்கள் படிப்பதே. கல்யாண மார்க்கெட்டில் ரேட்டைக் கூட்டத்தான். இது அநியாயம் என்றாலும், இதே அநியாயம், பல ஏழ்மை அநியாயங்களை ஒழித்து விடுகிறது என்பதும் உண்மை.

குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு லோகனுடையது. ‘எனக்கு நான் பாக்குற பொண்ணுதான் வேணும்’ என்று சொல்லி, இஷ்டப்படி கல்யாணம் செய்துகொண்டால், அதனால் பணம்