பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடியது கண்டு...

61


மகராஜனும் இருக்காரு. படிச்சவர்தான்; அவரைப்பத்தி ஒண்ணு சொல்ல முடியுமா?”

“நீதான் ஒன் அத்த மவன மெச்சிக்கிடனும். நீ என்னமோ அத்த மவன் ஒன்னக் கட்டுவான்னு நெனக்க. எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. நீ வித்தியாசமா எடுக்காட்டா ஒண்னு சொல்லுறேன். அவன் ஒன்னக் கெட்டிக்கிடுறேன்னு ஆசையா பேசுவான். நம்பி மோசம் போயிடாத ஆம்புள ஆயிரம் சவதில மிதிச்சி ஒரு கொளத்துல கழுவிடலாம். ஆனா பொம்பிள உஷாரா இருக்கணும். அதுவும் வெள்ளச்சட்டப் பயலுவகிட்ட ரொம்ப ஜாக்கரதயா இருக்கணும்.”

“ஆமாக்கா, திருநெல்வேலில படிச்சான் பாரு, பெருமாள், அவன் அய்யா, மவனுக்கு ரூபாய எடுத்துக்கிட்டு போனாராம். பெருமாள் கிட்ட மத்த பையங்க அவர யாருன்னு கேட்டாங்களாம். இவன் அய்யாவுக்கு கேக்காதுன்னு நெனச்சிக்கிட்டு எங்க வீட்டு வேலைக்காரன். வீட்ல இருந்து ரூபா குடுத்து, அப்பர் அனுப்பியிருக்கார்ன்னு சொன்னானாம். எப்படி யக்கா?”

“சொல்லியிருப்பான். அவனுக்கு கவர்னர் மவன்னு மனசுல நெனப்பு. விளங்காத பயபுள்ள. அவன் அய்யா இப்போ படுத்த படுக்கையா கெடக்காரு.”

உலகம்மை பொறுமையிழந்தாள். லோகுவைப் பற்றிப் பேச்சே வராதது தன் லட்சியம் நிறைவேறாதது போலிருந்தது. அதே நேரத்தில், அவன் பெயர் அந்த சந்தர்ப்பத்தில் அடிபடாமல் இருப்பதில் ஒருவித சந்தோஷமும் ஏற்பட்டது. மேலும் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். “அப்படின்னா ஒங்க ஊர்ல படிச்சவங்க எல்லாமே மோசமா?” என்றாள்.

“அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கு. மோசமான பய படிச்சா, ரொம்ப மோசமாயிடுறான். நல்ல பய படிச்சா, கொஞ்சம் மோசமாயிடுறான். காலேஜ்ல படிச்சவனும், சினிமா பார்க்கறவனும் கண்டிப்பா கெட்டுத்தான் போவான்.”

“ஆமா, ஒங்க ஊர்ல இருந்து ஒரு பையனுக்கு எங்க ஊர்ல கல்யாணம் நடக்கதா இருந்துதுல்லா?”

“அத ஏன் கேக்க? படிச்ச பயலுவள்ளே லோகன்தான் உருப்படியாவான்னு நெனச்சோம்! அவனும் மோசமான பயலாத்தான் இருந்திருக்கான், ஒங்க ஊர்ல போயி பொண்ணப் பாத்துட்டு ‘சரி’ சொல்லிட்டு வந்தான்! இப்ப கட்டமாட்டேன்னுட்டான். இவனுக்கும்