பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

ஒரு கோட்டுக்கு வெளியே ...



மாரிமுத்து நாடார், இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பவில்லை . இளநீர் குடித்தவர் காதில் எதேச்சையாகச் சொல்பவர்போல் பேசினார்.

"அவா என்னைக்கும் அடங்காப்பிடாரிதான் பொம்புள பேசுறத பெரிசா எடுக்காதிங்க. ஒண்ணுமில்ல, ஏட்டு ஸார். இவா அப்பன் மாயாண்டிக்கு அண்ணாடம் குடி. அந்தப் பக்கமா குடிச்சிட்டுத் தள்ளாடிக்கிட்டு வந்தான். 'ஏய்யா குடிக்கக் காசிருக்கு. கொடுத்த கடன அடைக்கக் காசில்லையான்னு' கேட்டேன். அதுக்கு குடிவெறில இங்கயே புரண்டுக்கிட்டுக் கத்தினான். இவா நான் கோடு கிழிச்சேன்னு கத்துறா. இந்தச் சாக்குல வாங்குன கடன ஏப்பம் போடலாமுன்னு நெனச்சி நடிக்கறா. நாட்ல சர்க்கார் நடக்குங்றத மறந்துட்டா..."

ஹெட்கான்ஸ்டபிள், எஸ்.பியைக் கண்டவர்போல், திடுக்கிட்டு எழுந்தார். மாயாண்டிப் பக்கம் போனார்.

"ஏய், ஊதுய்யா பாக்கலாம். போதும் ஊதுவது. தண்ணி நெறயா போட்டுருக்கான். ஏ பிள்ள, ஒப்பன சாராயத்த குடுத்துத் தெருவுல விட்டது முல்லாம பெரிய மனுஷங்கள அவமானப்படுத்தப் பாக்கியா? குடிக்கது சட்டவிரோதமுன்னு தெரியாதா? கான்ஸ்டபிள், இந்த ஆளைத் தூக்கும். மாயாண்டி நடப்பா ஸ்டேஷனுக்கு."

கான்ஸ்டபிளும், ஹெட்கான்ஸ்டபிளும் ஆளுக்கொரு கையாக, மாயாண்டியைப் பிடித்து நிறுத்தினார்கள். பிறகு ஒரு கையில் தத்தம் சைக்கிளை உருட்டிக்கொண்டு, இன்னொரு கையால், மாயாண்டியின் கையைத் தோளோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு புறப்பட்டார்கள். மாயாண்டி, பரக்கப் பரக்க விழித்தவராய் "ஒலகம்மா ஒலகம்மா!" என்று புலம்பிக்கொண்டே. அந்த போலீஸ்காரர்களுக்கு மத்தியில் நடக்க முடியாமல் நடந்தார்.

உலகம்மை வாயடைத்துப் போனாள். பெரிய அநியாயத்தைத் தண்டிக்க வந்த போலீஸ்காரர்கள், அந்த - ஆளைத் தண்டிக்க மனமில்லாமல், அதை மூடி மறைக்க, ஒரு அப்பாவியைக் கூட்டிப் போவதை நினைத்து. அவளால் பேசக்கூட முடியவில்லை. 'இப்படியும் நடக்குமா' என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு, கண்களைக் கசக்கிக் கொண்டாள். சிறிது தூரம் போவது வரைக்கும் அப்படியே ஸ்தம்பித்துப் போன உலகம்மை, பிறகு சுயநினைவுக்கு வந்தவள் போல் "அய்யா அய்யா, இவ்வளவு நாளும் காசு குடுக்காம இருந்துட்டு இன்னைக்கு குடுத்து ஒம்ம கெடுத்திட்டனே கெடுத்திட்டனே" என்று மம கெடுத்தும். காக சவுக்கு வந்தவப்படியே