பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 ஒரு சத்தியத்தின் அழுகை

ஈடுகட்டுவதுபோல் இருந்தாள் அவன் மனைவி. இருபத்திரண்டு வயதிருக்கலாம்; செக்ஸியான பார்வை; அதற்கேற்ற உடம்பு. அசாத்தியமான நம்பிக்கை அலட்டிக்காத தோரணை.

“ஏண்டா, தங்கச்சியையும் இந்தப் பொண்ணையும் என் வீட்ல விட்டுட்டு வந்திருக்கலாமே..."

"ஐ யம் லாரி... உன் ஆபீஸ் டெகோரத்தைக் கலைச்சிட்டேன்." “மடையா, நான் அந்த அர்த்தத்தில் சொல்லல. தங்கச்சி முதன் முதலில் இப்போதான் வந்திருக்கு என் ஒய்ஃப் எவ்வளவு சந்தோஷப்படுவாள் தெரியுமா?"

நான் டெலிபோனைச் சுழற்றப் போனேன். மோகன் ரிலீவரைப் பிடுங்கிக் கீழே வைத்தான்.

"இப்போ அவசரமா ஊருக்குக் கிளம்பிக் கொண்டு இருக்கோம். நாளைக்கு என் மச்சினிக்குக் கல்யாணம். திருத்தணிக்குப் போயிட்டு வர்ற வழி. இது..." "மாப்பிள்ளை யாருடா?" "உன்ன மாதிரியே ஒரு ஆபீலர்." "அப்படின்னா வீட்டுக்கு வரலியா?" "இன்னொரு நாளைக்கு வர்றோம். அப்புறம், இவரு வேலை விஷயம் என்னடா ஆச்சு?"

"அவ்வளவு சீக்கிரத்துல முடிஞ்சிடுமா. எங்கேயாவது வேகன்ஸி வரும்போது சொல்றேன்."நான் ஒருத்தன் வெல மெனகட்டு உன்கிட்ட பிச்சை வந்தேன்

பாரு... எல்லாம் இவளல. அவன் மாறிட்டாண்டி, மாறிட்டாண்டின்னு சொன்னேன். அறிவு கெட்ட கழுத என் வார்த்தையைக் கேட்டாத்தானே. ஏண்டி, நான் சொன்னேனே கேட்டியாடி! உன்னால எனக்குத்தான் அவமானம்.புருஷனைவிட சினேகிதி அவளுக்கு உசத்தியாப் போச்சு."  

டேய் ஏண்டா தங்கச்சியை இப்டி மிரட்டுற?" "மிரட்டுறேனா? வீட்டுக்கு வரட்டும், அவள் என்ன கதியா ஆகப் போறாள் பாரு."

"அண்ணா, இந்தப் பொண்ணுகிட்ட என் உயிரையே வச்சிருக்கேன். எப்படியாவது ஒரு வேலை வாங்கிக் கொடுத்திடுங்க. இல்லேன்னா நான்..."

மோகன் மனைவி கண்களைத் துடைத்துக் கொண்டாள். என்னால் தாளமுடியவில்லை.

"இன்னும் பதினைந்து நாளையில் எப்படியாவது ஒரு வேலையில அவனை வாரிப் போட்டுடுறேன். இந்தத் தடவை உன்னை ஏமாத்தமாட்டேன்' என்றேன். மோகனின் மனைவி