பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடித்தனம்

'வண்ணாரப்பேட்டை' என்று சொல்லாலும், 'வண்ணையம்பதி' என்று எழுத்தாலும் அழைக்கப்படும் அந்தப் பகுதியில், முன்னும் பின்னும் முடியாத அந்த தெருவுக்குள், ஒரு டெலஸ்கோப்பை வைத்துப் பார்த்தால், வாசல் பெரிதாகத்' தெரியும். உள்ளே போனால், சாலைகளில் கழண்டுபோய் கிடக்கும். 'சஸ்போன் பொந்துகள்' மாதிரி பல பொந்துகள் தெரியும். அவை குடித்தனக்காரர்கள் கொலுவிருக்கும் 'வீடுகள்'. இப்படி இருபது இருபத்தைந்து பொந்துகள். வாசல் ஒரத்தில் ஒரு 'கக்கூஸ்'. அதன் கதவு தனியாக எங்கேயோ கிடக்கும். டோகிறவர்கள், அதை எடுத்து வாசலில் பொருத்தி, கையில் கொண்டு போகும் 'பக்கட்டை' அணையாகக் கொடுத்து நிறுத்த வேண்டும்.

இத்தகைய பொந்து வீடுகளுக்கு மத்தியில் ஒரு குட்டி காம் பவுண்டும், அதற்குள் அழகான ஒரு சின்ன வீடும் இருக்கின்றன. அந்த வீட்டுக்கு மாடி உண்டு. மாடியில் பால்கனி உண்டு. அந்த பால்கனியில் நின்று பார்த்தால், பொந்து வீடுகளுக்குள் என்ன நடக்கும் என்பது தெரியும். சொல்லப்போனால், அது 'சிஐஏ' பாணியில் கட்டப்பட்ட பால்கனி மாதிரி. தெரிந்தது.

மாலை மணி ஆறாகிவிட்டது. மழை மேகம் சூழ்ந்த மையிருட்டில் குரலை வைத்தே அடையாளம் காண முடியும். காம்பவுண்ட் வீட்டுக்குள் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ரேடியோ ஒலித்துக்கொண்டிருந்தது.

அந்த வீட்டின் ஒசி வெளிச்சத்தில், அஞ்சலை உட்பட நாலைந்து பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அஞ்சலைக்கு இருபத்து மூன்று வயதிருக்கும். இதர பெண்களில் இருவர் கிழவிகள். அஞ்சலை, ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டு, பதிலை வரவழைத்துக் கொண்டிருந்தாள்.

"ஆமா... இன்னிக்கு பய வியாபாரத்துல எம்மாக்காக கிட்சுது?"

"இந்த மழைல... எல்லாப் பயமும் அலுவிப்பூட்டு... ரோட்மேல பூட்டிருந்தேன்... போலீஸ் லாரிக்காரன் என்னையும், பயத்தையும் வாரிக்கின்னு பூட்டான். கட்டையில பூறவேன்களுக்கு... ஏதாவது வாயில பூட்டிருந்தா விட்டிருப்பான்... காசில்ல... நாளக்கி பயின் கட்டணும். யார்கிட்ட கேக்குறதுன்னு புரியல... படாபேஜார் பொழப்பு..."