பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்மம் ஜெயிக்கும் 53

லீவை சாங்ஷன் செய்யாமல் அவன் ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்தார். அவனுக்குச் சம்பந்தமில்லாத அனுபவமில்லாத வேலைகளை அட்மினிஸ்ரேட்டிவ் ரீஸன்ஸ் என்ற சாக்கில் கொடுத்து, அவன் தன் திறமையைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்று இரண்டாவது மெமோவைக் கொடுத்தார். அதே சமயம் தலைமைக் குமாஸ்தா தங்கவேலுக்கு, ஒரு டெம்பரரி பிரமோஷன் கிடைத்தது. தலைமைக் குமாஸ்தா பதவிக்குப் போனார். கேஷியர் வேலைக்கு, நளினி வந்தாள். அவர்கள் எந்த நேரத்திலும் வரலாம், போகலாம். மானேஜர், சொன்னபடி உட்காருபவர்கள், இப்போது சொல்வதற்கு முன்னதாகவே உட்கார்ந்தார்கள்.

சேகர் பொறிகலங்கிப் போனான். முதியவர் முத்துசாமி ஆறுதல் கூறினார்.

"கவலைப்படாதே கண்ணா... கடைசிப் படிக்கட்டு தான் கஷ்டமான படிக்கட்டு. தர்மம் ஒழிஞ்சு போனது மாதிரி தோணும்... கடைசியில் அதுதான் ஜெயிக்கும்."

சேகர், தன் புகார்களைப்பற்றி மீண்டும் டைரெக்டர்களுக்கு நினைவுபடுத்தினான். விசாரணை இல்லையென்றால், அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்தான்.

ஒரு மாதம் ஆகியிருக்கும். விசாரணைக் குழு வந்தது. அந்தச் சமயத்தில் முத்துசாமி ஒய்வை முன்னிட்ட விடுமுறையில் போய்விட்டார். விசாரணைக்குழு முன்னால் தான் டாக்ஸியில் போனதாகவும், மானேஜருக்கு சம்பந்தம் இல்லையென்றும் அலிஸ்டெண்ட் மானேஜர் தங்கவேல் சத்தியம் செய்தார். ஜூன் மாதத்திலேயே பணம் வாங்கிவிட்டதாக நளினி உறுதி கொடுத்தாள். ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு, தங்கள் விசுவாசத்தைக் காட்டினார்கள்.

விசாரணை முடிந்த மாலையில், சேகர் தன் சகாக்கள் இருந்த இடத்திற்கு விரைந்தான்.

"பொட்டைப் பயல்கள்!" என்று தன்னையுமறியாமலே சாடினான். "ஆமாம். உன் வீரத்தைக் காட்டுறதுக்காக... நீ எதையாவது ாழுதுவே. நாங்க எங்க பொண்டாட்டி பிள்ளைங்க வாயில... மண்ண போட்டுட்டு. உன்கூட சேரணும். நீ பெரிய வீரனாகணும். அப்படித்தானே," என்றான் குமாஸ்தா துரை.