பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொகுசுக்காரர்கள் 57

"ஒங்க பெரிய மனசை நினைக்கையில சந்தோசமாய் இருக்கு மாமா. ஆனால் என் பிள்ளையைச் சுவீகாரமாய்க் கொடுக்க முடியாது.”

'ஏய், உனக்கு அறிவிருக்கா? ஒன்னைவிட மோசமா இருக்கிறான் அந்தப் பய. ஒரு நாளைக்குப் பாத்தா மூணு நாளைக்குச் சாப்பிட முடியாது. இவனைப் போய் யாரு சுவீகாரம் எடுக்கப் போறது? சரியான பைத்தியக்காரியாய் இருக்கிறியே!”

"என் பிள்ளை எப்படியும் இருந்துட்டுப் போவுது. உம்ம ஜோலியைப் பார்த்துட்டுப் போங்க."

பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தன் குறுக்கே புகுந்தார். அரசியலில் அவருக்கு நல்ல அநுபவம்.

"என்ன பரமசிவம், அவரவர் பிள்ளை அவரவருக்கு உசத்தி. வந்த வேலையைப் பாக்கிறத விட்டுப்புட்டு. இது எதுக்கு? நான் சொல்றேம்மா. இவங்கெல்லாம் சென்னையிலே ஒரு சங்கம் வச்சு நடத்துறாங்க. நம்ம கிராமத்தையே தத்து எடுத்து எல்லா வசதியும் செய்து தரப்போறாங்க. அதில் ஒண்ணுதான் பிள்ளையைப் பேணுவோம்' என்கிற திட்டம். ஒன் பிள்ளைய சோதிச்சுப் பாத்து வேண்டிய மருந்து கொடுப்பாங்க, அவ்வளவு தான்."

"என் பையனுக்கு அடிக்கடி வெட்டு வருதுங்க ஐயா. வயித்துல மாந்தம் இருந்தா வெட்டு வருமுன்னு சொல்லி நாட்டு வைத்தியரு தங்கவேலு கஸ்தூரி மாத்திரையையும் அயச் செந்தூரத்தையும் கொடுத்துக்கிட்டு வந்தாரு. இப்போ அவரோட கைராசியாலேயும் ஒங்க புண்ணியத்தாலேயும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுகமாயிட்டு வருது. அதனால இப்போ வேண்டாம்."

அவள் பையனைப் பார்த்து, 'இதுதான் சரி' என்று தங்களுக்குள்ளே பேசித் திருப்திப் பட்டுக்கொண்ட மூன்று டேர்களும் முகங்களைச் சுழித்தார்கள். மூவரில் வயதான தொந்திக்காரர், எத்தனை அறியாமை?" என்றார். உருவிய ஸ்டெதாஸ்கோப்பைக் கோட்டுக்குள் எப்படிப் போடுவது என்று வாலிப டாக்டர் யோசித்துக் கொண்டிருந்தார்.

இளமங்கை உடம்பு குலுங்காமல், அதே நேரத்தில் உதட்டை ஒய்யாரமாகக் கடித்துக்கொண்டே பொன்னாத்தாவின் அருகில் வந்தாள். சேலையில் உள்ள தூசி, அந்தப் பட்டணத்து மங்கைமேல் பட்டுவிடும் என்று பயந்து, பொன்னாத்தா விலகி விலகிப் போனாள். இளமங்கை விடுவதாக இல்லை. பொன்னாத்தாவின் கையைப் பிடித்தாள். பிறகு அவளோடு ஒட்டிக்கொண்டு கிடந்த பையனின் முதுகைத் தடவி விட்டதும், பயல் தோளில் சாய்ந்திருந்த தலையைத் தூக்கி, அவளைப் பார்த்தான். அவன் கன்னத்தை லேசாகக் கிள்ளிவிட்டுப் பிறகு அந்தப் பெண் இடுப்பில்