பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி நிமிர்ந்து பார்க்கிறாள் 9.5

அவர்களின் மனைவியரும் மீனாட்சியை மாடு மேய்ப்பதற்கு அனுப்புவதாகவும், அந்த வாயுள்ள பிராணிக்கு வயிறார உணவு கிடைக்கவில்லை என்பதையும் கேள்விப்பட்ட சாமிநாதன், ஊருக்குப் போய், தங்கையைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்.

இங்கேயும் அதே அவலம் தான். "இன்னைக்கு மட்டுமில்ல அப்பா... தினமும் அத்தையை... இவள் இப்படித்தான் அடிப்பாள்... அம்மாவும்... பேசாமல் கையைக் கட்டிக்கிட்டு நிற்பாள்..." என்றாள் விமலா. சொல்லிவிட்டு, அம்மாவைக் காட்டிக்கொடுத்த திருப்தியில் லயித்தாள்.

சாமிநாதனுக்கு, ரத்தபாசம் சப்தநாளங்கள் எல்லாம் பரவி அலைமோதியது. தினமும் மீனாட்சி அடிபடுகிறாளா.. தினமும் இவள் கையைக் கட்டிக்கொண்டு நிற்கிறாளா...

"ஏண்டி... நீ அடிக்கிறத பாத்துக்கிட்டுதான் நிக்கிறியா... இல்ல. நீயும் சேர்த்து அடிக்கிறியா..."

"உங்களுக்குத்தான் பேசத் தெரியுங்கற மாதிரி குதர்க்கமா பேசாதீங்க. இந்த இரண்டு வருஷத்திலே ஒங்க தங்கச்சிய கோபமா ஒரு தடவை தொட்டிருந்தாக்கூட, என் கை அழுகிப் போயிடும். நானும் அக்கா தங்கச்சியோட பிறந்தவள்தான்."

"ஏம்மா மழுப்புறே? முந்தாநாள். நீ கூடத்தான் அத்தையை திட்டினே. என்னைமாதிரி அவள் எதிர்த்துப் பேசலே. இல்லன்னா என்னை அடிக்கிறமாதிரி அவளையும் அடிச்சுருப்பே. என்று வசந்தா தெரிவித்ததும் சாமிநாதனுக்குச் சுர்ரென்று கோபம் வந்தது.

“ஏண்டி. முந்தாநாள் அவளை எதுக்காகத் திட்டினே?" “முந்தா நாள்... நம்ம சங்கருக்கு ஜூரமுன்னு டாக்டர் கிட்ட போயிருந்தேன்... உங்க தங்கச்சியும் கூட வந்தாள். திரும்பி வரும்போது வழியில நம்ம காமாட்சி பாத்துட்டா... வீட்டுக்குப் போன்னு சொல்லி இவள் கையில சாவியைக் குடுத்தேன்."

“&#!”

"நான் காமாட்சியோட பேசிட்டு, வீட்டுக்கு வரும் போது இவள் வெளில நிக்குறா. கையில சாவியில்ல. சாவி எங்கேன்னு கேட்டா பதில் இல்ல. பித்து பிடிச்சவள் மாதிரி சாக்கடைக் குழாயையே பாத்திட்டு நிற்கிறாள். சாக்கடையில சாவிய போட்டியான்னு கேட்டால்... அதுக்கும் பதிலில்ல. கடைசில. சாக்கடைக்குள்ள கம்பு வச்சிப் பார்த்தோம். சாவி கிடந்தது. ஊரையே கூட்டி என் மானத்தை வாங்கிட்டா.'

சாமிநாதன் தங்கையைப் பார்த்தார். இப்போதும் மீனாட்சி தன் தலையை நிமிரவேயில்லை.