பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

105


இரண்டு நேர்க்கோடுகளைப் போட்டு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நேர்க்கோட்டின் பின்னால் 5அடி தூரத்தில் பத்து கரளாக் கட்ட்ைகளை (Indian clubs) வைத்து

விட வேண்டும்.

ஒவ்வொரு குழுவும் நேர்க்கோட்டில் நின்று, தங்களுக்குரிய 10 கரளா கட்டைகளும் பறிபோகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆடும் முறை: எதிர்க்குழு காக்கின்ற 10 கரளா கட்டைகளையும் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதுதான் ஆட்டத்தின் நோக்கமாகும்.

விசில் ஒலிக்குப் பிறகு, இரண்டு குழுவினரும் தங்கள் கரளா கட்டைகளைப் பாதுகாப்பதுடன், அடுத்தவர்களது கரளா கட்டைகளையும் கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான் ஆட்டத்தின் நோக்கமாகும். -

ஆடுகளமையத்திலிருந்துதான் எதிராளியின் எல்லை ஆரம்பமாகிவிடுகிறது.

எதிரொளியின் எல்லையில் இருக்கும்பொழுது, எதிராளியால் தொடப்படுகின்ற ஆட்டக்காரர் ஆட்ட மிழக்கிறார்(out) எதிராளியால் தொடப்படாமல் எதிராளி நிற்கும் நேர்க்கோடு எல்லையைக் கடந்து விட்டால், ஒரு கரளா கட்டை அவருக்குப் பரிசாகக் கிடைக்கும்.

கரளா கட்டையை எடுத்துக் கொண்டு திரும்புகிற வரை, எதிராளி தொட்டாலும் அவர் ஆட்டமிழக்க Losru LTsi. (Not out)

தங்கள் கரளா கட்டையைப் பாதுகாத்துக் கொண்டு, எதிராளியால் தொடப்படாமல், எதிராளி காத்திருக்கும் கரளாகட்டைகளைக் கொண்டுவரும் போராட்டம் 5நிமிட