பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


78. வட்டமிடும் பந்தாட்டம் (Circle over Take Relay)

ஆட்ட அமைப்பு: 10 மீட்டர் விட்டமுள்ள பெரிய வட்டம் ஒன்றைப் போட்டு அந்தக் கோட்டின் மீது (வட்டமாக) விளையாடவிருக்கும் மாணவர்களை முதலில் நிறுத்தி வைக்க வேண்டும். பிறகு, முதலில் ஒருவருக்கு ஒன்று என (நம்பர்) ஒரு எண்ணைக் குறித்துக் கூற, அதற்கடுத்தவரை விட்டுவிட்டு, அவருக்கும் அடுத்த ஆட்டக்காரரை இரண்டு எனக் குறிப்பிட வேண்டும். அதாவது ஒருவர் மாற்றி ஒருவர் (Alternate) என்று நம்பர் கொடுத்துக் கொண்டே வந்தால், அதில் பாதி ஆட்டக் காரர்கள் ஒரு குழுவிலும், மீதியுள்ளவர்கள் இன்னொரு குழுவிலும் என்று ஆகிவிடுகிறார்கள். ஆக, ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் இருவர்.அடுத்தடுத்து நிற்காமல், இன்னொரு குழுவினருக்கு இடையே நிற்பது போல், ஆடுவதற்கு முன் நிற்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு குழுத் தலைவனை நியமிக்க வேண்டும். அவர்கள் கையில் ஆளுக்கொரு பந்து எனக் கொடுத்து வைக்க வேண்டும். ஆடும் முறை: ஆசிரியரின் விசில் ஒலிக்குப் பிறகு, பந்து வைத்திருக்கின்ற குழுத் தலைவன், தன் குழுவின ரான அடுத்தவருக்குப் பந்தை வழங்க, அவர் மற்றவருக்குத் தர, இவ்வாறு இடது கைப்புறமாக ஒருவரும் (Clockwise) வலது கைப்புறமாக (Anti clock wise) ஒருவரும் பந்தை

வகமாகக் கைமாற்றி (pass) அனுப்ப வேண்டும்.

குறிப்பு: அந்தந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் பந்தை மாற்றிக் கொள்ளவேண்டும். ஒருவர்மாற்றி ஒருவர் நிற்பதால் கவனமாகப் பந்தை மாற்றி அனுப்ப வேண்டும்