பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


குனியலாம். நெளியலாம். எப்படியாவது தன்மேல் உள்ளவர் பந்தைப் பிடிக்காதவாறு செய்துவிடவேண்டும்.

தனக்கு வருகின்ற பந்தைப் பிடிக்க முடியாமல் தவறவிடுகின்ற குதிரை வீரன், உடனே குதிரையாகிக் குனிந்து கொள்ள குதிரையாக இருந்தவர் அவர்மேல் ஏறிக்கொண்டு குதிரை வீரராக ஆட்டம் தொடரும்.

குறிப்பு: குதிரை வீரர்கள் பந்தை எறியும்போது, மற்றவர் கைக்கு எளிதாகக் கிடைத்து, பிடித்தாடு வதற்கேற்ப எறிய வேண்டும்.

80. தொடர் பந்தாட்டம்

(Ball Pass Relay)

ஆட்ட அமைப்பு: மாணவர்களை நான்கு சம

எண்ணிக்கையுள்ள குழுவினர்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒடத் தொடங்கும் கோடு ஒன்றைப் போட்டு