பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

125



ஒரு வெற்றி எண் உண்டு. 10 முறை பலரையும் அழைத்து நடத்திய பிறகு, எந்தக்குழு அதிக வெற்றி எண்களை எடுத்திருக்கிறதோ, அந்தக் குழுவே வெற்றி பெற்றதாகும்.

86. வட்டத் தாக்குதல்

(Bomb the Centre)

ஆட்ட அமைப்பு: விளையாட வந்திருக்கும் ஆட்டக் காரர்களில் (முக்கால் பகுதிக்கு மேல் எண்ணிக்கையில்) பெரும்பான்மை ஆட்டக்காரர்களை 20 கெஜ விட்டமுள்ள வட்டம் ஒன்றில் நிற்கச் செய்துவிட்டு மீதியுள்ள ஆட்டக்காரர்களை வட்டத்திற்கு வெளியே நிற்க வைக்க வேண்டும்.

வெளியே நிற்பவர்களில் ஒருவரிடம் பந்து இருக்க வேண்டும்.